14 ஆண்டுகளை நிறைவு செய்த கோலி.. சச்சின் சாதனையோடு சிறு ஓப்பீடு.. கோலிக்கு பலே சான்ஸ்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் அடியேடுத்து வைத்து இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

Recommended Video

India அணியின் கேப்டன் Rohit Sharma ODI Cricket விமர்சனம் பற்றி பதிலடி *Cricket

அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற கோலிக்கு, தானாக இந்திய அணியில் விளையாட வாய்ப்பு வந்தது. அதன் பிறகு நடந்தது அனைத்தும் சாதனை தான்.

கடந்த ஒரு ஆண்டாக விராட் கோலி சரிவர விளையாடவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதற்காக அவர் படைத்த சாதனைகளை மறந்துவிட முடியுமா?

ஆசிய கோப்பை - பும்ராவுக்கு பதில் யார் களமிறங்கலாம்.. பிளேயிங் லெவனில் 3 பேருக்கு இடையே போட்டிஆசிய கோப்பை - பும்ராவுக்கு பதில் யார் களமிறங்கலாம்.. பிளேயிங் லெவனில் 3 பேருக்கு இடையே போட்டி

2008ஆம் ஆண்டு

2008ஆம் ஆண்டு

கடந்த 2008ஆம் ஆண்டு இதே நாளில் தான் விராட் கோலி தனது முதல் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக விளையாடினார். தற்போது அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதங்களும் விளாசியுள்ளார். மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதம் விளாசியுள்ள அவர், கடந்த இரண்டரை அண்டுகளாக மூன்று இலக்க எண்களை தொடவே இல்லை.

சச்சின் சாதனைகள்

சச்சின் சாதனைகள்

இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு விராட் கோலிக்கு மட்டும் தான் இருப்பதாக ரசிகர்கள் கருதும் நிலையில், இதே 14 ஆண்டுகள் நிறைவு செய்து இருந்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் எத்தனை ரன்கள் அடித்திருந்தார் என்பதை கோலியுடன் ஒப்பீடு செய்வோம்.

14 ஆண்டுகள் முடிவில்

14 ஆண்டுகள் முடிவில்

14 ஆண்டுகள் முடிவில் சச்சின் 312 இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். ஆனால் விராட் கோலி 253 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி இருக்கிறார். சச்சின் 12 அயிரத்து 685 ரன்களை விளாசி இருக்கிறார். விராட் கோலியோ 12 ஆயிரத்து 344 ரன்கள் அடித்திருக்கிறார். இதை இரண்டையும் ஓப்பிட்டால் சச்சினை விட 321 ரன்கள் தான் கோலி குறைவாக அடித்திருக்கிறார். சச்சினுடைய சராசரி 45 ரன்கள் என்ற அளவே உள்ளது,

சச்சின் Vs கோலி

சச்சின் Vs கோலி

ஆனால் விராட் கோலியின் சராசரி 57 என்ற அளவில் உள்ளது. சச்சினுடைய ஸ்ட்ரைக் ரேட் 86. ஆனால் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 92 என்ற அளவில் உள்ளது. சச்சின் 14 ஆண்டு முடிவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 36 சதம் அடித்துள்ளார், விராட் கோலியோ, அதே நிலையில் 43 சதங்களை விளாசி இருக்கிறார். இருவரும் இதே கட்டத்தில் 64 அரைசதங்கள் அடித்து இருக்கிறார்கள். ஆனால் சச்சின் அடுத்த 10 ஆண்டுகளில் 6 ஆயிரம் ரன்கள், 13 சதங்கள் விளாசி இருக்கிறார். கோலி இன்னும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat Kohli completes 14 years in International cricket – small comparison with Sachin14 ஆண்டுகளை நிறைவு செய்த கோலி.. சச்சின் சாதனையோடு சிறு ஓப்பீடு.. கோலிக்கு பலே சான்ஸ்
Story first published: Thursday, August 18, 2022, 18:37 [IST]
Other articles published on Aug 18, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X