For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவை விட்டு வெளியே போ..!! கேப்டன் விராட் கோலியின் சர்ச்சைகள்..!! மோதல்கள்..!! - ஒரு பார்வை

சென்னை: விராட் கோலி களத்தில் ஆக்கோரஷமாக செயல்படுவதில் வல்லவர். புஷ்பானா ஃபிளவர் நினைச்சிங்களா ஃபயரு..

இந்த வசனம் அல்லு அர்ஜூனுக்கு பொறுத்தமாக இருக்குமோ இல்லையோ, நம் விராட் கோலிக்கு சரியாக இருக்கும்.

நாடு கடத்தப்படுகிறார் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்.. கடைசி முயற்சி தோல்வி.. ஆஸி.க்கு நுழைய 3 ஆண்டு தடை?நாடு கடத்தப்படுகிறார் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்.. கடைசி முயற்சி தோல்வி.. ஆஸி.க்கு நுழைய 3 ஆண்டு தடை?

ஏனென்றால் விராட் கோலி பலமுறை களத்திலும் சரி, களத்திற்கு வெளியேவும் சரி ஏழரையை கூட்டியுள்ளார். ஆனால் , விராட் கோலியின் இந்த ஆக்கோரஷம் தான் ரசிகர்களுக்கும் பிடிக்கும்

பயிற்சியாளருடன் மோதல்

பயிற்சியாளருடன் மோதல்

இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே நியமிக்கப்பட்ட போது, இதனை கோலி விரும்பவில்லை. இதனால் வேறு பயிற்சியாளரை நியமிக்கும்மாறு பி.சி.சி.ஐ.க்கு விராட் கோலி கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மன வருத்தத்துடன் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்

அரசியலுக்கு ஆதரவு

அரசியலுக்கு ஆதரவு

பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட போது, விராட் கோலி அதற்கு முழு ஆதரவு அளித்தார். இதுவரை அரசியல் ரீதியாக எந்த ஒரு இந்திய கேப்டனும் அரசின் செயலுக்கு ஆதரவோ, எதிர்ப்போ தெரிவித்தது இல்லை. இதனால் மரபு மீறி விராட் கோலி செயல்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

ஸ்மித்துடன் மோதல்

ஸ்மித்துடன் மோதல்

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது கேப்டன் டிம் பெயினிடம் விராட் கோலி கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டார். இதனால் ஐ.சி.சி. இருத் தரப்பையும் எச்சரித்தது. ஆஸ்திரேலிய இந்தியாவுக்கு வந்த போது டி.ஆர்.எஸ். முடிவு எடுக்க ஸ்மித் அணி நிர்வாகத்தின் உதவியை நாடினார். இதனால் கடுப்பான விராட் கோலி, ஸ்மித்திடம் கடுமையாக நடந்து கொண்டார். செய்தியாளரின் சந்திப்பிலும் ஸ்மித்தை திட்டினார்

சர்ச்சை டிவிட்

சர்ச்சை டிவிட்

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது ஆண்டர்சனிடம் விராட் கோலி திட்டி சர்ச்சையில் சிக்கி கொண்டார். சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் எனக்கு இந்தியா மேட்ச்சே பிடிக்காது என்று தெரிவித்த நிலையில், அதற்கு கோலி அப்படி என்றால் எதற்கு இந்தியாவில் இருக்கிறாய், வெளிநாட்டுக்கு செல். இந்தியாவில் இருந்து கொண்டு ஏன் அடுத்த நாட்டை நேசிக்கிறாய். இந்தியாவில் இருந்து கொண்டு மற்ற நாடுகளை ஏன் விரும்புகிறாய் என்று கடுமையாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கி, பின்னர் விளக்கம் அளித்தார்.

Story first published: Sunday, January 16, 2022, 19:52 [IST]
Other articles published on Jan 16, 2022
English summary
Virat kohli controversies as captain and war of words இந்தியாவை விட்டு வெளியே போ..!! கேப்டன் விராட் கோலியின் சர்ச்சைகள்..!! மோதல்கள்..!! - ஒரு பார்வை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X