புதிய உலக சாதனை.. எந்த கேப்டனும் நெருங்க முடியாது.. விராட் கோலிக்கு WTC Final-ல் "சூப்பர்" வாய்ப்பு

சவுத்தாம்ப்டன்: 'கிங்' கோலிக்கு ஒரு மெகா சாதனை படைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதுவும், உலகின் நம்பர்.1 ரெக்கார்டாக மாறப்போகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

WTC Final: சும்மா புலம்பாதீங்க.. வெற்றி இந்தியாவுக்கே - சுனில் கவாஸ்கர் நெத்தியடி WTC Final: சும்மா புலம்பாதீங்க.. வெற்றி இந்தியாவுக்கே - சுனில் கவாஸ்கர் நெத்தியடி

இதற்காக, சவுத்தாம்ப்டனே இந்திய ரசிகர்களால் களைக்கட்டத் தொடங்கியுள்ளது. இந்திய அணி வீரர்களும் பல நாள் கிரிக்கெட் போட்டிகளின்றி ஓய்வில் இருந்து புத்துணர்ச்சியுடன் களமிறங்குகின்றனர்.

70 செஞ்சுரீஸ்

70 செஞ்சுரீஸ்

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விராட் கோலி ஒரு மெகா சாதனை படைக்க அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதாகப்பட்டது, நம்ம கிங் கோலி, இதுவரை 70 சர்வதேச சதங்களை விளாசித் தள்ளியுள்ளார். இதில், 43 ஒருநாள் கிரிக்கெட் சதம் மற்றும் 27 டெஸ்ட் சதங்கள் அடங்கும்.

சாதனை தகர்க்க வாய்ப்பு

சாதனை தகர்க்க வாய்ப்பு

அதேசமயம், நடக்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் சதம் அடித்தார் எனில், கேப்டனாக அதிக சதம் அடித்த புதிய உலக சாதனையை கோலி படைப்பார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், சர்வதேச போட்டிகளில் கேப்டனாக 41 சதங்கள் அடித்திருக்கிறார். விராட் கோலியும் 41 சதங்களில் இருக்கிறார்.

தட்டித் தூக்க ரெடி

தட்டித் தூக்க ரெடி

இந்நிலையில், அவர் மீண்டும் சதம் அடிக்கும் பட்சத்தில், கேப்டனாக 42வது சதத்தை விராட் கோலி எட்டுவார். உலகின் வேறு எந்த கேப்டனும் இத்தனை சதங்களை அடித்ததில்லை. இத்தனை வருடங்களாக ரிக்கி பாண்டிங் வசமிருந்த அந்த சாதனை கிரீடத்தை, விராட் கோலி தட்டித் தூக்க அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது.

இந்திய பிளேயிங் லெவன்

இந்திய பிளேயிங் லெவன்

முன்னதாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய பிளேயிங் லெவன் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. நாளை மறுதினம், அதாவது ஜூன்.17ம் தேதி அன்றே, இந்திய பிளேயிங் லெவன் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat Kohli Could Break Major Record Ponting - விராட் கோலி
Story first published: Tuesday, June 15, 2021, 13:22 [IST]
Other articles published on Jun 15, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X