For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னை இப்படி மாற்றிய 2012... மனம் திறந்த கோஹ்லி!

By Veera Kumar

டெல்லி: உலகின் தலைசிறந்த உடற்கட்டு மற்றும் ஆரோக்கியமான வீரர் என்றால் அது தற்போதைக்கு இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோஹ்லி மட்டுமே.

உடலை தொப்பை, தொந்தியில்லாமல் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலாகட்டும், பாய்ந்து ஃபீல்டிங் செய்வதிலாகட்டும், ரன் ஓடுவதிலாகட்டும், கோஹ்லி தி பெஸ்ட்.

கோஹ்லியை பார்த்து வியப்பு

கோஹ்லியை பார்த்து வியப்பு

உடம்பு சரியில்லை என இவர் லீவு விடுவதில்லை என்பதை பார்த்து வியந்து கிடக்கிறார்கள் பல நாட்டு கிரிக்கெட் வீரர்களும். அப்படித்தான் வியந்து இங்கிலாந்தின் முன்னணி ஆங்கில பத்திரிகையொன்று, கோஹ்லியிடம் பேட்டியெடுத்தது. இந்த பேட்டியில் கோஹ்லி கூறிய விஷயங்கள், விளையாட்டு துறையில் சாதிக்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும், உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஆசைப்படுவோருக்கும் உந்து சக்தியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

செம ஃபார்ம்

செம ஃபார்ம்

கோஹ்லி என்ன கூறினார் என பார்ப்போம். "2012ம் ஆண்டு. ஆம், அப்போதுதான் எனது வாழ்க்கையில் பெரிய திருப்பம் நிகழ்ந்தது. ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது நான் சிறப்பாக விளையாடியிருந்தேன். வங்கதேசத்துக்கு எதிராக 180 ரன்களை குவித்திருந்தேன். அதன்பிறகு ஐபிஎல் தொடரில் காலடி எடுத்து வைத்தேன். அப்போது நான் நினைத்துக்கொண்டதெல்லாம், நான் நல்ல ஃபார்மில் இருக்கிறேன். இந்த ஐபிஎல் எனதுடையது. அனைத்து பவுலர்களையும் நான் துவைத்து விடுவேன் என்று நினைத்துக்கொண்டேன்.

இஷ்டப்படி வாழ்வு

இஷ்டப்படி வாழ்வு

எனது மித மிஞ்சிய தன்னம்பிக்கையால், பயிற்சியில் பெரிதாக கவனம் வைக்கவில்லை. கண்டதையும் சாப்பிட்டேன். இரவு நேரம் கழித்து தூங்கினேன். இப்போது நினைத்து பார்த்தால் அது ஒரு மட்டமான மனநிலை என புரிகிறது. ஐபிஎல் தொடரும் ஆரம்பித்தது. நான் சொதப்பி தள்ளினேன். தொடர் முடிவடைந்ததும்தான் நிம்மதியடைந்தேன். அப்பாடா, தப்பினோம் என நினைத்தேன்.

கண்ணாடி சொன்ன உண்மை

இந்த தொடர் முடிந்த பிறகு ஒருநாள் எனது வீட்டில் குளித்து விட்டு கண்ணாடி முன்பு வந்து நின்று உடலை பார்த்தேன். இப்படி உடலை வைத்துக்கொண்டு எல்லா வகையான கிரிக்கெட்டையும் ஆட முடியாது. ஷேப் செய்தே ஆக வேண்டும் என தீர்மானித்தேன்.

பிளட்சர் கொடுத்த டிப்ஸ்

அந்த காலகட்டத்தில் எனக்கு முன்னாள் பயிற்சியாளர் டன்கன் பிளட்சர் கொடுத்த டிப்ஸ் மிகவும் பலன் கொடுத்தது. எனது உணவு பழக்கத்தை மாற்றினேன். சரியாக உடற்பயிற்சி செய்தேன். இப்போது நான் ஃபிட்டாக உள்ளேன். அதற்கு காரணம் பிளட்சர்தான். உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது மனதும் புத்துணர்வோடு உள்ளது. இதனால்தான் என்னால் கிரிக்கெட்டில் சாதிக்க முடிகிறது. உடலுக்கும், மனதுக்கும் நேரடி தொடர்பு உள்ளதை உணர்கிறேன்.

வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம்

இந்திய அணி வீரர்கள் அனைவருமே ஃபிட்னஸ்சோடு இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். பல்வேறு நாடுகளில் விளையாட செல்லும்போது, அதற்கு ஏற்ப உடல் தகுதி அவசியம். தொடர்ச்சியாக இந்தியா, வெளிநாடுகளிலும் வெற்றி பெற உடல் தகுதிதான் அடிப்படை தேவை. இவ்வாறு விராட் கோஹ்லி தெரிவித்தார்.

Story first published: Wednesday, November 23, 2016, 15:04 [IST]
Other articles published on Nov 23, 2016
Read in English:
English summary
India's Test skipper Virat Kohli is not only at the epitome of his form but the Delhi lad is also one of the fittest cricketers in the world.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X