For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வேடிக்கை பதிவால் இன்ஸ்டாகிராமை தெறிக்கவிட்ட விராட் கோலி -டேவிட் வார்னர்

ஆக்லாந்து : நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் பிசியாக செயல்பட்டு வந்தாலும் இந்திய கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமிலும் வலம்வர தவறவில்லை.

ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னரின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு கேப்டன் விராட் கோலி அளித்துள்ள வேடிக்கையான கமெண்ட் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, முதல் டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

5 சர்வதேச டி20 போட்டிகள்

5 சர்வதேச டி20 போட்டிகள்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளது.

தொடர்ந்த செயல்பாடு

தொடர்ந்த செயல்பாடு

டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்களில் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி முன்னிலையில் உள்ளார். விளையாட்டு வீரர்களில் இவரது செயல்பாடு சமூக வலைதளத்தில் அதிகமாக உள்ளது.

வார்னரின் பதிவிற்கு பதில்

வார்னரின் பதிவிற்கு பதில்

நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டிகளில் அணியை வழிநடத்தும் பணியில் மிகவும் பிசியாக உள்ள விராட் கோலி சமூக வலைதளத்திலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னரின் பதிவிற்கு விராட் உடனடி கமெண்ட் அளித்துள்ளார்.

கலாய்த்த விராட் கோலி

தன்னுடைய 18 பேட் கலெக்ஷன்களை காட்சிப்படுத்திய ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், ஸ்டாக் எடுக்கும் நேரம் என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

விராட் கோலியின் கமெண்ட்

விராட் கோலியின் கமெண்ட்

டேவிட் வார்னரின் பதிவிற்கு கமெண்ட் அடித்த விராட் கோலி, அந்த கலெக்ஷனில் வைக்க தன்னுடைய பேட்டும் வேண்டுமா என வேடிக்கையாக கமெண்ட் அடிக்க, அதற்கு வார்னரும் ஆமாம் ஒரு பேட் வேண்டும் என்று சிரிப்பு எமோஜியுடன் பதில் கமெண்ட் அடித்துள்ளார்.

Story first published: Sunday, January 26, 2020, 15:33 [IST]
Other articles published on Jan 26, 2020
English summary
Virat Kohli comments David warner's Instagram post
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X