For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியுடன் கைகோர்த்த விராட் கோலி.... இதுல கூடவா ஒற்றுமை... 4வது டெஸ்டில் அரங்கேறிய சுவாரஸ்ய சாதனை

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் சொதப்பியுள்ள கோலி, தோனியின் மோசமான சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

இந்நிலையில் டக் அவுட் ஆனதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.

சொல்லாமல் அடித்த கில்லி... சிஎஸ்கேவுக்கு முன்னதாகவே பயிற்சியை துவங்கிட்டாங்க ஆர்சிபி! சொல்லாமல் அடித்த கில்லி... சிஎஸ்கேவுக்கு முன்னதாகவே பயிற்சியை துவங்கிட்டாங்க ஆர்சிபி!

கடைசி டெஸ்ட்

கடைசி டெஸ்ட்

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்து முதல் இன்னிங்ஸில் 205/10 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் டக் அவுட்டாகி வெளியேற ரோகித் சர்மா, புஜாரா ஆகியோர் நிதானமாக ஆடினர். பின்னர் புஜாராவும் 17 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

அவுட்

அவுட்

பின்னர் அணியின் ஸ்கோரை உயர்த்த அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். 8 பந்துகளை எதிர்கொண்ட கோலி, பென் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சரில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக 8வது முறையாகக் கோலி டக் அவுட்டானார்.

தோனியுடன் சேர்ந்த கோலி

தோனியுடன் சேர்ந்த கோலி

இந்த டக் அவுட் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மோசமான சாதனையைச் சமன் செய்தார் விராட் கோலி. எம்.எஸ். தோனி கேப்டனாக இருந்த போது 8 முறை ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகியுள்ளார். தற்போது விராட் கோலியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

மோசம்

மோசம்

இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆவது 2வது முறையாகும். முன்னதாக சென்னையில் நடந்த 2வது டெஸ்டில் டக் அவுட்டானார். கடந்த 2014க்கு பின் கோலி முதல் முறையாக ஒரே தொடரில் இரண்டு முறை ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறியுள்ளார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது 12வது டக் அவுட்டாகும்.

Story first published: Friday, March 5, 2021, 16:47 [IST]
Other articles published on Mar 5, 2021
English summary
Virat Kohli equals MS Dhoni's unwanted Achievment
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X