For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியோட கஷ்டத்தை அப்பதான் புரிஞ்சுகிட்டேன்.. கோலியால் மறக்கவே முடியாத அந்த 2 ஓவர்!

மும்பை : தோனி கேப்டனாக இருந்த போது விராட் கோலி ஒரு முறை இரண்டு ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்தார்.

Recommended Video

Virat Kohli experienced Dhoni’s trouble

தோனி இல்லாத நிலையில் விக்கெட் கீப்பிங்கும் செய்தார். அப்போது தான் தோனியின் கஷ்டத்தை தான் உணர்ந்ததாக ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.

தோனி கண்டிப்பா விளையாடுவார்... அவரோட ஆட்டத்த பார்க்க காத்துக்கிட்டிருக்கேன் தோனி கண்டிப்பா விளையாடுவார்... அவரோட ஆட்டத்த பார்க்க காத்துக்கிட்டிருக்கேன்

கேப்டன் மாற்றம்

கேப்டன் மாற்றம்

2014இல் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வு பெற்ற போது விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை பிடித்தார். பின்னர் 2016இல் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாகவும் உயர்ந்தார் விராட் கோலி.

நேரடியாக உணரும் தருணம்

நேரடியாக உணரும் தருணம்

அதற்கு முன்னதாக 2015இல் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி ஒரு கேப்டனாகவும் இருந்து, விக்கெட் கீப்பராகவும் இருப்பது எத்தனை கடினம் என நேரடியாக உணரும் தருணம் வந்தது. தோனி இரண்டு ஓவர்கள் ஓய்வு எடுக்கச் சென்ற போது அதை அனுபவித்தார் கோலி.

தோனியிடம் கேளுங்கள்

தோனியிடம் கேளுங்கள்

அது பற்றி விராட் கோலி, சமீபத்தில் இந்திய அணி வீரர் மயங்க் அகர்வால் எடுத்த பேட்டியில் விரிவாக கூறி உள்ளார். அப்போது தான் தோனியின் கஷ்டத்தை தான் உணர்ந்ததாகவும், அதுபற்றி இளம் வீரர்கள் தோனியிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இரண்டு ஓவர்கள்

இரண்டு ஓவர்கள்

2015 வங்கதேச ஒருநாள் தொடரின் இடையே இரண்டு ஓவர்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என நினைதா தோனி, விக்கெட் கீப்பிங் பணியை அப்போதைய துணை கேப்டன் விராட் கோலியிடம் கொடுத்துள்ளார். அப்போது பீல்டிங் நிறுத்தும் வேலையையும் கோலியே செய்துள்ளார்.

இரண்டு வேலை

இரண்டு வேலை

ஒவ்வொரு பந்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும், அதே சமயம் பீல்டிங்கையும் மாற்ற வேண்டும் என்பதை கோலி அனுபவப் பூர்வமாக உணர்ந்ததாக கூறினார். மேலும், அப்போது உமேஷ் யாதவ் பந்து வீசி வந்ததாகவும் கூறினார்.

ஹெல்மெட்

ஹெல்மெட்

உமேஷ் யாதவ் முழு வேகத்தில் பந்து வீசிய போது தனக்கு முகத்தில் அடிபட்டு விடுமோ என பயமாக இருந்ததாகவும், எனினும், ஹெல்மெட் அணிந்து கொண்டால் அவமானமாக இருக்கும் என்பதால் தான் அணியவில்லை என குறிப்பிட்டார்.

Story first published: Wednesday, July 29, 2020, 21:32 [IST]
Other articles published on Jul 29, 2020
English summary
Virat Kohli experienced Dhoni’s trouble as a Captain and Wicket keeper, in 2015 Bangladesh ODI series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X