ஐபிஎல் 2022: கோலிக்கு ஆரம்பத்திலேயே அநீதி.. ஆர்சிபி எடுத்த அதிரடி முடிவு.. தக்கவைத்த வீரர்கள் யார்?

பெங்களூரு ; ஐ.பி.எல். 2022ஆம் ஆண்டு தொடருக்கான ஏலம் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. புதிய அணிகள் பங்கேற்பதால் மற்ற அணிகள் அதிகபட்சம் 4 வீரர்களை தக்க வைத்துவிட்டு, மற்றவர்களை விடுவிக்க வேண்டும்

இந்த நிலையில் பெங்களூரு அணி 3 வீரர்களை மட்டும் தக்க வைத்துள்ளது. இதில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ஊதியத்தை அந்த அணி நிர்வாகம் அதிடியாக குறைத்துள்ளது,

தற்போது பெங்களூரு அணிக்கு ஏலத்தில் 57 கோடி ரூபாய் மட்டும் தான் செலவு செய்ய முடியும்.

விராட் கோலி

விராட் கோலி

பெங்களூரு அணி முதல் வீரராக விராட் கோலியை தேர்வு செய்துள்ளது. விராட் கோலிக்கு கடந்த ஐ.பி.எல். தொடரில் 17 கோடி ரூபாய் கொடுத்த பெங்களூரு அணி நிர்வாகம் , தற்போது 15 கோடி ரூபாய் தான் தந்துள்ளது. இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மற்ற அணிகளுக்காக விளையாட மாட்டேன் என்று விராட் கோலி முன்பே கூறியிருந்த நிலையில் தற்போது அவர் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்வெல்லை 2வது வீரராக பெங்களூரு அணி தேர்வு செய்துள்ளது. அவருக்கு 11 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என கலக்கி வந்த மேக்ஸ்வெல், பெங்களூரு அணியில் தொடர்ந்து பயணிப்பது, கூடுதல் பலமாகவே கருதப்படுகிறது.

முகமது சிராஜ்

முகமது சிராஜ்

இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மூன்றாவது வீரராக பெங்களூரு அணி தக்க வைத்து கொண்டுள்ளது. முகமது சிராஜ்க்கு 7 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இதனிடையே, கடந்த ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய ஹர்சல் பட்டேலை பெங்களூரு அணி நிர்வாகம் தக்க வைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாஹல் இல்லை

சாஹல் இல்லை

சுழற்பந்துவீச்சாளர் சாஹலை 4வது வீரராக 6 கோடி ரூபாய்க்கு தக்க வைத்து கொள்ள பெங்களூரு நிர்வாகம் வாய்ப்பு வழங்கியது. ஆனால் தனது அனுபவத்திற்கு 6 கோடி ரூபாய் குறைவு என்று முடிவு எடுத்துள்ள சாஹல், ஏலத்தில் பங்கேற்க முடிவு எடுத்துள்ளார். இதனால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதே போன்று அதிரடி தொடக்க வீரர் படிக்கல்லையும் பெங்களூரு அணி தேக்க வைக்கவில்லை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat Kohli Faces salary cut in RCB Team and Picks 3 Players. RCB Leaves out Talented Young Players
Story first published: Tuesday, November 30, 2021, 22:10 [IST]
Other articles published on Nov 30, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X