For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்போ தான் வரும் நம்பர் 71.. இரண்டு ஆண்டுகள் காத்திருப்பு தொடர்கிறது!!

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் முடி சூடா மன்னனாக வலம் வருபவர் விராட் கோலி.டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி என ரன்களை வாரிகுவிப்பதில் வல்லவர்

இதனால் ரசிகர்கள் விராட் கோலியை ரன் மிஷின் என்று அன்புடன் அழைப்பார்கள். இதே போன்று சதம் விளாசுவதை டீ குடிப்பது போன்று ஒரு பழக்கமாக கோலி கடைபிடித்து வந்தார்.

யாராலும் தொட முடியாது என்று நினைக்கும் சச்சினின் 100 சர்வதேச சதம் மற்றும் அதிக ரன்கள் என்ற சாதனையை விராட் கோலி கொஞ்சம் அசைத்து பார்த்தார்.

நியூசிலாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா.. !!நியூசிலாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா.. !!

எப்போது வரும்?

எப்போது வரும்?

இப்படி பல சாதனைகளை படைத்து வந்த விராட் கோலி மீது யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை. கடைசியாக சதம் விளாசி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதம் அடித்துள்ள விராட் கோலி, 71வது சதத்தை எப்போது அடிப்பார் என்று காத்துள்ளனர்

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

சமீப காலமாக ஃபார்ம் அவுட்டான விராட் கோலி, இழந்த ஃபார்மை மீட்பதற்காக மும்பையில் பயிற்சி முகாமில் பங்கேற்றார். தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்ட அவர் பேட்டிங்கில் தமக்கு இருக்கும் குறையை நிவர்த்தி செய்ய கவனம் செலுத்தினார்

ஏமாற்றம்

ஏமாற்றம்

மும்பை தமக்கு ராசியான மைதானம் என்பதால், நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் விராட் கோலி கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடுவரின் தவறான முடிவால் முதல் இன்னிங்சில் டக் அவுட்டானார். இந்த நிலையில் பாலோ ஆன் தராமல் 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய தீர்மானித்த கோலி 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

இதனால், அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இனி டிசம்பர் 26ஆம் தேதி தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதில் கோலி சதம் விளாச வேண்டிய நெருக்கடியில் உள்ளார். இதனால் 2020ஆம் ஆண்டை போல், நடப்பாண்டிலும் சதம் விளாசவில்லை என்ற சோகம் கோலிக்கு தொடரும்..

Story first published: Sunday, December 5, 2021, 23:48 [IST]
Other articles published on Dec 5, 2021
English summary
Virat kohli Fails to score 71st century. In Mumbai test He scored o and 36 runs. So he has to Wait for SA Tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X