For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன முடிவு எடுக்கறாங்க.. கோலி கடும் கோபம்.. போட்டியில் நடந்த பரபர சம்பவம்!

Recommended Video

Kohli and Pollard angry on Jadeja's controversial Runout issue

சென்னை : சென்னையில் நேற்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் அவுட் குறித்த அம்பயரின் முடிவால் கேப்டன் விராட் கோலி கோபமடைந்தார்.

இந்தியாவுடனான சர்வதேச டி20 தொடரை பறிகொடுத்த மேற்கிந்திய தீவுகள் அணி, தற்போது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 288 என்ற கடுமையான இலக்கையே இந்தியா கொடுத்தது. ஆயினும், அதை எளிதாக கையாண்டு அவர்கள் வெற்றியை கைப்பற்றினர்.

 முதல் சர்வதேச ஒருநாள் போட்டி

முதல் சர்வதேச ஒருநாள் போட்டி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, சர்வதேச டி20 போட்டிகளில் 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதல் நாள் ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

 எளிதாக அடித்த மேற்கிந்திய தீவுகள்

எளிதாக அடித்த மேற்கிந்திய தீவுகள்

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பௌலிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து முதலில் ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 287 ரன்களை அடித்தது.

 காட்ரெல் பந்தில் அவுட்

காட்ரெல் பந்தில் அவுட்

கடந்த டி20 இறுதி ஆட்டத்தின்போது 70 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் விராட் கோலி, சென்னையில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 4 ரன்களே அடித்து காட்ரெல் பந்தில் ஆட்டமிழந்தார்.

 ஸ்ரேயாஸ் ஐயர் -ரிஷப் பந்த் 114 ரன்கள்

ஸ்ரேயாஸ் ஐயர் -ரிஷப் பந்த் 114 ரன்கள்

போட்டியில் 4வதாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்துடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 114 ரன்களை அடித்து அணிக்கு வலிமை சேர்த்தார்.

 மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

இந்நிலையில், 288 என்ற இலக்கை கொண்டு விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் பதற்றமில்லாமல் மிக எளிதாக வெற்றியை கைப்பற்றினர்.

 விக்கெட் கொடுத்த 3வது அம்பயர்

விக்கெட் கொடுத்த 3வது அம்பயர்

ரவீந்திர ஜடேஜா 21 ரன்களுடன் 48வது ஓவரில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு பந்தில் ஒரு ரன் எடுப்பதற்காக ஓடினார். ஆனால், தன்னிடம் வந்த பந்தை கைப்பற்றிய எதிரணி வீரர் ரோஸ்டன் ஸ்டம்பை நோக்கி அடித்தார். இதுகுறித்து 3வது அம்பயரிடம் முடிவு கேட்கப்பட்டது. அவர் அவுட் என்ற முடிவை அளித்தார்.

என்ன முடிவு எடுக்கறாங்க என கோபம்

இந்நிலையில் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த கேப்டன் விராட் கோலி, பவுண்டரி லைனில் வந்து அம்பயர் என்ன முடிவை எடுக்கிறார் என பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவுட் என்ற முடிவு அறிவிக்கப்பட்டவுடன் கோபத்தில் கொந்தளித்த அவர், அந்த கோபத்துடனேயே திரும்பி சென்றார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

Story first published: Monday, December 16, 2019, 11:39 [IST]
Other articles published on Dec 16, 2019
English summary
Virat fumes on Umpire's decision on Ravindra Jadeja dismissal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X