For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 நாளைக்காக 7 நாள் குவாரன்டைன்... என்ன கேப்டன் இப்படி பண்றீங்க!

சென்னை : ஐபிஎல்லையொட்டி அணிகள் மற்றும் அணி வீரர்கள் சிறப்பான வகையில் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரையடுத்து மும்பைக்கு சென்றுவிட்ட ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தற்போது அணியில் இணைந்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் பலம், பலவீனம், பெஸ்ட் ப்ளேயிங் 11 என்ன? இந்த முறை மீளுமா? முழு கணிப்பு இதோ! சிஎஸ்கே அணியின் பலம், பலவீனம், பெஸ்ட் ப்ளேயிங் 11 என்ன? இந்த முறை மீளுமா? முழு கணிப்பு இதோ!

சென்னையில் தங்களது பயிற்சி முகாமை ஆர்சிபி துவங்கியுள்ள நிலையில், தன்னுடைய குவாரன்டைனை முடித்துக் கொண்டு பயிற்சிகளில் அவர் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

9ம் தேதி துவக்கம்

9ம் தேதி துவக்கம்

ஐபிஎல் 2021 தொடர் வரும் 9ம் தேதி சென்னையில் முதல் போட்டியுடன் துவங்கவுள்ளது. மே மாதம் 30ம் தேதிவரை கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கென 8 ஐபிஎல் அணிகளும் சிறப்பாக தங்களை தயார் படுத்தி வருகின்றன. ஆர்சிபி அணி சென்னையில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்சுடன் மோதவுள்ளது

குவாரன்டைனில் விராட்

குவாரன்டைனில் விராட்

இதையடுத்து தற்போது சென்னைக்கு தனது பயிற்சி முகாமை ஆர்சிபி மாற்றியுள்ளது. அணி வீரர்கள் சிறப்பான வகையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அணியில் கேப்டன் விராட் கோலி இணைந்துள்ளார். அவர் கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மேற்கொண்ட பயோ பபளை முறியடித்து தனது வீட்டிற்கு சென்ற நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் குவாரன்டைனில் ஈடுபட உள்ளார்.

7 நாட்கள் குவாரன்டைன்

7 நாட்கள் குவாரன்டைன்

இதனிடையே, கேப்டன் சென்னைக்கு வந்தது குறித்து ஆர்சிபி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 7 நாட்கள் குவாரன்டைனை மேற்கொள்ளவுள்ள விராட் கோலி, அதையடுத்து அணியின் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபடுவார் என்றும் வரும் 9ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

துவக்க வீரராக விராட் ஆட்டம்

துவக்க வீரராக விராட் ஆட்டம்

அவர் இந்த ஐபிஎல் சீசனில் தனது அணிக்காக துவக்க வீரராக களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதை அணியின் கிரிக்கெட் இயக்குநர் மைக் ஹெசனும் உறுதிப்படுத்தியுள்ளார். இதனிடையே ஆர்சிபி தலைமை கோச் சைமன் காட்டிச்சும் பௌலர் நவ்தீப் சைனியும் தங்களது குவாரன்டைனை முடித்துக் கொண்டு பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர்.

Story first published: Thursday, April 1, 2021, 21:44 [IST]
Other articles published on Apr 1, 2021
English summary
Head coach Simon Katich, pacer Navdeep Saini also came out of quarantine and underwent practice session
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X