ஆச்சரியமளிக்கும் புள்ளிவிவரம்.. கோலியின் கேப்டன்சி ரெக்கார்டுகள்.. தோனியையே மிஞ்சிவிட்டார்!

மும்பை: டி20 கிரிக்கெட் கேப்டன்சியில் மிகப்பெரும் புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு கோலி பதவி விலகியிருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய அணியில் 3 வடிவ கிரிக்கெட்டிற்கும் தனித்தனி கேப்டன்சி வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கைகள் எழுந்து வந்தன.

ஐபில்: கோலியின் ரெக்கார்டையே முறியடிக்கும் வீரர்.. நிச்சயம் 2 - 3 சதங்களை அடிப்பார்.. கம்பீர் உறுதி ஐபில்: கோலியின் ரெக்கார்டையே முறியடிக்கும் வீரர்.. நிச்சயம் 2 - 3 சதங்களை அடிப்பார்.. கம்பீர் உறுதி

அதற்கு வழிவிடும் வகையில் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

கோலி பதவி விலகல்

கோலி பதவி விலகல்

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள விராட் கோலி, கடந்த 5 - 6 ஆண்டுகளாக இந்தியாவின் 3 வடிவ கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருந்து வருகிறேன். பணிச்சுமையை கருத்தில் கொண்டு வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்

அதிர்ச்சியில் ரசிகர்கள்

விராட் கோலியின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் கேப்டன்சி, கிங் கோலி என பல்வேறு ஹேஷ்டேக்குகள் மூலம் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பிசிசிஐ அதிகாரிகளுக்கும் அறிவித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன்சி புள்ளிவிவரம்

கேப்டன்சி புள்ளிவிவரம்

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் யாராலும் அசைக்க முடியாத கேப்டன்சி ரெக்கார்ட்களை கோலி வைத்துள்ளதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை 45 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள விராட் கோலி 29 வெற்றிகளையும், 14 தோல்விகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார். இவரின் கேப்டன்சி வெற்றி சதவீதம் 64.44 ஆக உள்ளது. முன்னாள் கேப்டன் தோனி கூட இந்த அளவிற்கு சிறப்பான புள்ளிவிவரத்துடன் இடம்பெறவில்லை.

சிறந்த கேப்டன்

சிறந்த கேப்டன்

உலகளவில் சிறந்த டி20 கேப்டன்களின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2வது இடத்தில் உள்ளார். குறைந்தது 40 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர்களுக்கான இந்த பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆஸ்கர் ஆஃப்கான் முதலிடத்தில் உள்ளார். அவர் 52 போட்டிகளில் தலைமை தாங்கி 42 வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார். அவரின் வெற்றி சதவீதம் 80.77 ஆகும். இவருக்கு அடுத்த இடத்தில் கோலி 64.44 என உள்ளார்.

தோனிக்கு 6வது இடம்

தோனிக்கு 6வது இடம்

3வது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் டூப்ளசிஸ் 40 போட்டிகளில் 25 வெற்றிகளை பெற்றுக்கொடுத்து 62.50 என்ற சதவீதத்துடன் 3வது இடத்திலும், இங்கிலாந்தின் இயான் மோர்கன் 60.94%, வெஸ்ட் இண்டீஸ் அணியின் டேரன் ஷமி 59.57% உடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி 58.33 சதவீதத்துடன் 6வது இடத்தில் உள்ளார். இப்படி தோனியின் ரெக்கார்டை முந்தியுள்ள கோலி, பதவி விலகியது குறித்து ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat kohli have Great record in T20 Captaincy Record, Full details
Story first published: Thursday, September 16, 2021, 19:17 [IST]
Other articles published on Sep 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X