For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி 100 கேள்வி கேட்பார்.. நம்பிக்கை வந்துட்டா அவ்ளோ தான் - பிட்னெஸ் பயிற்சியாளர் சங்கர்பாசு!

சென்னை : தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர் இந்திய கேப்டன் விராட் கோலி. ஆனால் அவர் இன்னும் தன்னுடைய உடலை பிட்னெசாக வைத்துக் கொள்வதில் உச்சநிலையை அடையவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிட்னெஸ் பயிற்றுநர் சங்கர் பாசு தெரிவித்துள்ளார்.

உசைன் போல்ட் மற்றும் நோவக் டிஜோகோவிக் போன்றவர்களை தன்னுடைய முன் மாதிரியாக கொண்டு செயல்பட வேண்டும் என்று தான் அடிக்கடி விராட் கோலிக்கு ஆலோசனை வழங்குவேன் என்றும் சங்கர் பாசு கூறியுள்ளார்.

ஒரு விஷயத்தை நம்புவதற்கு முன்பாக நூறு கேள்விகளை கேட்கும் விராட், அந்த விஷயத்தை நம்பிவிட்டால் அதற்காக எந்த எல்லைக்கும் செல்வார் என்று பாசு கூறியுள்ளார். மேலும் விராட் கோலி போன்ற மாணவனை பெறுவது மிகவும் கடினம் என்றும் சங்கர் பாசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

"விராட் இன்னும் உச்சம் அடையவில்லை"

தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளவர் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி. ஆனால் இந்த விஷயத்தில் அவர் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிட்னெஸ் பயிற்றுநர் சங்கர் பாசு தெரிவித்துள்ளார்.

 பிட்னெஸ் டிரெயினர் சங்கர் பாசு

பிட்னெஸ் டிரெயினர் சங்கர் பாசு

இந்திய கிரிக்கெட் அணியின் பிட்னெஸ் டிரெயினராக இருந்த சங்கர் பாசுவின் ஒப்பந்தம் கடந்த உலக கோப்பையுடன் நிறைவுற்ற நிலையில், இவர் கோலி மற்றுமம் தோனியின் பிட்னெஸ் ரகசியங்களை மனம்திறந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

 போக வேண்டிய தூரம் அதிகம்

போக வேண்டிய தூரம் அதிகம்

தன்னுடைய உடல் ஆரோக்கியம் மற்றும் பிட்னெசில் அதிக அக்கறை காட்டும் விராட் கோலி, அந்த விஷயத்தில் இன்னும் உச்சநிலையை அடையவில்லை என்றும் பாசு கூறியுள்ளார்.

 விராட்டிற்கு பாசு ஆலோசனை

விராட்டிற்கு பாசு ஆலோசனை

தன்னுடைய உடலை உசைன் போல்ட் மற்றும் நோவக் டிஜோகோவிக் போன்றவர்களை முன்மாதிரியாக கொண்டு பராமரிக்க வேண்டும் என்று தான் அடிக்கடி விராட் கோலிக்கு ஆலோசனை வழங்குவேன் என்றும் பாசு கூறியுள்ளார்.

 காத்திருக்கும் பல மைல் பயணம்

காத்திருக்கும் பல மைல் பயணம்

தான் ஈடுபட்டுள்ள எந்த விஷயத்திலும் சிறந்ததை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் விராட் கோலி. அவர் தனது பிட்னெஸ் விஷயத்தில் இன்னும் பல மைல்கள் செல்ல வேண்டியுள்ளது என்றும் பாசு குறிப்பிட்டுள்ளார்.

 பிட்னெஸ் டிரெயினிங் குறித்து பாசு

பிட்னெஸ் டிரெயினிங் குறித்து பாசு

பிட்னெஸ் பயிற்றுனநராக இருக்க முதலில் விளையாட்டு வீரரின் நம்பிக்கையை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ள பாசு, அவர்களை குழந்தைகளை போல கருதி அவர்களுக்கு தேவையானவற்றை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 விராட் குறித்து பாசு

விராட் குறித்து பாசு

பிட்னெஸ் விஷயத்தில் ஒரு வீரரின் நம்பிக்கையை பெறுவது மிகவும் அவசியம் என்று கூறியுள்ள பாசு, இந்த விஷயத்தில் விராட்டின் நம்பிக்கையை பெறுவதற்கு தனக்கு பல ஆண்டுகள் ஆனது என்றும் தெரிவித்துள்ளார்.

 பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும்

பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும்

வீரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு சரியான விடைகளை அளிக்க வேண்டும் என்றும் சங்கர் பாசு கூறியுள்ளார்.

 எந்த எல்லைக்கும் செல்வார்

எந்த எல்லைக்கும் செல்வார்

விராட் கோலி ஒரு விஷயத்தை நம்புவதற்கு முன்பாக நூறு கேள்விகள் கேட்பார் என்றும், ஆனால் ஒருமுறை அதில் நம்பிக்கை வந்துவிட்டால் அதை கடைபிடிக்க எந்த எல்லைக்கும் செல்வார் என்றும் சங்கர் பாசு மேலும் கூறினார். அவரைபோன்ற மாணவர் கிடைப்பது மிகவும் கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 வித்தியாசமான அணுகுமுறை

வித்தியாசமான அணுகுமுறை

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பிட்னெஸ் விஷயத்தில் தன்னுடைய சொந்த நடைமுறைகளை கடைப்பிடிப்பவர் என்றும், அவரது நடைமுறைகள் வித்தியாசமாக இருக்கும் என்றும் பாசு குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, December 8, 2019, 11:28 [IST]
Other articles published on Dec 8, 2019
English summary
IT is difficult to get a student like Virat Kohli - Shankar basu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X