For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என் இதயம் சுக்குநூறாக உடைந்துவிட்டது- விராட் கோலியின் கண்ணீர் பதிவு

மும்பை: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலி சமூக வலைத்தளத்தில் மனதை உருக்கும் அளவிற்கு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

Recommended Video

AB de Villiers retires from cricket, to miss IPL and RCB | OneIndia Tamil

கிரிக்கெட் ஜாம்பவான் டிவில்லியர்ஸ், ஐ.பி.ல். உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். டிவில்லியர்ஸ்க்கு பிரியாவிடை அளிக்கும் விதமாகவே விராட் கோலி இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

டிவில்லியர்சின் இந்த முடிவு தமது இதயத்தை சுக்குநூறாக உடைத்துவிட்டதாக கூறிய கோலி, அவரை சகோதரன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இனி கிரிக்கெட்டுக்கு குட்பை..!! டிவில்லியர்ஸ் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சிஇனி கிரிக்கெட்டுக்கு குட்பை..!! டிவில்லியர்ஸ் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

அண்ணன்-தம்பி

அண்ணன்-தம்பி

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக டிவில்லியர்ஸ் விளையாடி வந்தார். அப்போதிலிருந்தே விராட் கோலியும், டிவில்லியர்சும், அண்ணன், தம்பி போல் தான் பழகி வந்தனர். களத்திலும் சரி, களத்திற்கு வெளியேவும் சரி ராமன், லட்சுமண்ன் போல் விளங்கி வந்த ஜோடி, எப்போதும் எதிரணியை பந்தாடும். இந்த ஜோடி அதிகபட்சமாக குஜராத் லையன்ஸ் அணிக்கு எதிராக229 ரன்களை குவித்துள்ளது. இந்த ஜோடி ஐ.பி.எல். போட்டிகளில் 10 முறை, 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் வைத்துள்ளது.

பாராட்டு

பாராட்டு

விராட் கோலி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உங்களை பார்த்து நான் நிறைய விஷயங்களை கற்று கொண்டுள்ளேன். எங்களது வாழ்நாளில் நாங்கள் பார்த்த சிறந்த வீரர்களில் ஒருவர் நீங்கள். ஆர்.சி.பி. அணிக்காக நீங்கள் கொடுத்த பங்களிப்பை நினைத்து எப்போதும் பெருமை கொள்ளலாம் என்று பாராட்டியுள்ளனர். நமது உறவு கிரிக்கெட்டை தாண்டி நிலவும் உறவு என்றும் கோலி குறிப்பிட்டுள்ளார்.

ஐ லவ் யூ

ஐ லவ் யூ

டிவில்லியர்ஸ் எடுத்த முடிவு எனது இதயத்தை நொறுக்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ள கோலி, இருப்பினும் தங்களுக்கான சிறந்த முடிவையே நீங்கள் எடுப்பீர்கள் என்பதை தாம் அறிவேன் என்று பதிவிட்டுள்ளார். உங்கள் குடும்பம் எப்போதும் போல் உங்களை விரும்பும் என்றும் தெரிவித்துள்ள கோலி ஐ லவ் யூ என்று பதிவிட்டு இதயம் நொறுங்கும் எமோஜியுடன் பதிவை முடித்துள்ளார்.

சகாப்தம் முடிவு

சகாப்தம் முடிவு

37 வயதான ஏ.பி. டிவில்லியர்ஸ் இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அவரது ஓய்வு முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக (END OF AN ERA) கூறி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். டிவில்லியர்ஸ் இல்லாத ஆர்.சி.பி. அணி என்னவாகும் என்று நினைக்கும் போதே நமக்கும் ஆர்.சி.பி. ரசிகர்கள் மீது கவலை தான் வருகிறது.

Story first published: Friday, November 19, 2021, 21:35 [IST]
Other articles published on Nov 19, 2021
English summary
Virat kohli heartfelt tributes to AB Devilliers after his retirement from cricket. Virat kohli calls ABD as his brother. Kohli also reveals ABD Decision made his heart hurts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X