மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு

சிட்னி : ஆர்சிபி அணியில் கோலியின் தலைமையின்கீழ் இணைந்து விளையாடி வருகிறார் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜோஷ் பிலிப்.

இந்நிலையில் கேப்டன் விராட் கோலி மைதானத்தில்தான் மிகவும் தீவிரமாக போட்டிகளை எதிர்கொள்வார் என்று பிலிப் தெரிவித்துள்ளார்.

மிருகத்தை போல நடத்தினார்கள்.. லிஃப்டில் நடந்த அந்த சம்பவம்.. அதிர வைத்த அஸ்வின்!

ஆனால் மைதானத்திற்கு வெளியில் அவர் மிகவும் பணிவானவர் என்றும் பழகுவதற்கு எளிமையானவர் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆர்சிபியில் ஜோஷ் பிலிப்

ஆர்சிபியில் ஜோஷ் பிலிப்

ஆர்சிபி அணியில் விராட் கோலியின் தலைமையின்கீழ் இணைந்து விளையாடி வருகிறார் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜோஷ் பிலிப். கடந்த ஐபிஎல் 2020 தொடரில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய பிலிப் 78 ரன்களை எடுத்திருந்தார்.

ஆர்சிபியில் தக்கவைக்கப்பட்ட பிலிப்

ஆர்சிபியில் தக்கவைக்கப்பட்ட பிலிப்

இந்நிலையில் ஐபிஎல் 2021 தொடரிலும் அவர் ஆர்சிபி அணிக்காக தக்கவைக்கப்பட்டுள்ளார். அணியிலிருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜோஷ் தக்கவைக்கப்பட்டுள்ளது அணி அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

விராட் குறித்து பிலிப்

விராட் குறித்து பிலிப்

இவர் இந்த சீசனில் தேவ்தத் படிக்கல்லுடன் சேர்த்து துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விக்கெட் கீப்பிங்கையும் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலி மைதானத்தில் மட்டுமே தீவிரமாக போட்டிகளை எதிர்கொள்வார் என்று பிலிப் தெரிவித்துள்ளார்.

பழகுவதற்கு எளிமையானவர்

பழகுவதற்கு எளிமையானவர்

மைதானத்தில் விராட்டின் ஆக்ரோஷமான செயல்பாட்டால் அனைத்து கேமராக்களும் அவரை போகஸ் செயவதாகவும் ஆனால் மைதானத்திற்கு வெளியில் அவர் மிகவும் இயல்பாகவும் பணிவாகவும் செயல்படுவார் என்றும் பழகுவதற்கு எளிதானவர் என்றும் பிலிப் மேலும் கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Philippe reveals that Kohli is humble and an easy to approach person off the field
Story first published: Sunday, January 24, 2021, 11:50 [IST]
Other articles published on Jan 24, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X