For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

BIG BREAKING – இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி ராஜினாமா… உருக்கமான கடிதம்

கேப் டவுன்: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி ராஜினாமா செய்துள்ளார். தென்னாப்பிரிக்க தொடரை இழந்ததை அடுத்து விராட் கோலி இந்த முடிவு எடுத்துள்ளார்.

ஏற்கனவே ஒருநாள் போட்டி, டி20 போட்டியிலிருந்து விலகிய நிலையில் தற்போது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகியுள்ளார்.

விராட் கோலியின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவர் ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்

7 ஆண்டுகள்

7 ஆண்டுகள்

அதில் 7 ஆண்டுகளாக கேப்டனாக கடுமையாக உழைத்து , அணியை சரியான பாதையில் வழிநடத்தியுள்ளேன். கேப்டனாக எப்போதும் மனதுக்கு நேர்மையாக நடந்துள்ளேன்.அனைத்து நல்ல விசயங்களுக்கும், ஒரு முடிவு இருக்கும்.அது போல் கேப்டன் பொறுப்பிலிருந்து தற்போது ராஜினாமா செய்கிறேன். இந்த பயணத்தில் பல ஏற்றம், இறக்கங்களை கண்டுள்ளேன். ஆனால் எப்போதும் என் தன நம்பிக்கையை விட்டது இல்லை.

சக வீரர்களுக்கு நன்றி

சக வீரர்களுக்கு நன்றி

இந்திய அணிக்காக 120 சதவீதம் என் முழு ஆற்றலுடன் வெற்றிக்காக உழைத்துள்ளேன். என்னால் அப்படி முழு திறனையும் அணிக்காக தர முடியவில்லை என்றால் , என்னால் கேப்டனாக தொடர முடியாது. என் அணிக்கு நேர்மையற்றவனாக என்னால் இருக்க முடியாது.இத்தனை ஆண்டுகள் எனக்கு கேப்டனாக வாய்ப்பு வழங்கிய பி.சி.சி.ஐ.க்கு நன்றி. எத்தனை கடின சூழல் நிலை இருந்தாலும், கடைசி வரை போராடும் என்னுடைய சக வீரர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி

பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி

சக வீரர்களின் பங்கால் தான் எனது குறிகோளை அடைய முடிந்தது. இவர்களால் தான் என் பயணம் இனிமையாக இருந்தது. பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி மட்டும் மற்ற நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த நன்றி, அவர்களின் பங்களிப்பு இல்லை என்றால் என்னால் இவ்வளவு வெற்றி பெற்று இருக்க முடியாது. எனது குறிகோளும் உயிர் பெற்று இருக்காது

தோனிக்கு நன்றி

தோனிக்கு நன்றி

முக்கியமாக என்னுடைய கேப்டன் தோனிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். என்னை நம்பி, இவ்வளவு பெரிய பொறுப்பை அவர் தான் எனக்கு வழங்கினார். இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடுவேன் என்று விராட் கோலி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணிக்கு 68 போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள கோலி, 40 போட்டிகளில் வெற்றி, 11 போட்டிகளில் டிரா, 17 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளார்.

Story first published: Saturday, January 15, 2022, 19:53 [IST]
Other articles published on Jan 15, 2022
English summary
Virat kohli is stepped down from test captaincy with immediate effect BIG BREAKING – இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி ராஜினாமா…
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X