For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி இல்ல..! விராட் கோலி தான் பெஸ்ட் கேப்டன்.. முன்னாள் ஆல்ரவுண்டர் ஓபன் டாக்..!!

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் யார் என்று ரசிகர்களுக்குள் காலம் காலமாக மோதல் வருவது வழக்கம்

இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கி தந்த கபில் தேவ் தான் சிறந்த கேப்டன் என்ற ஒரு பிரிவினரும்.

புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்! புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்!

அந்நிய மண்ணிலும் இந்தியாவால் வெல்ல முடியும் என்று நிரூபித்து காட்டிய கங்குலி என்று ஒரு பிரிவினரும், இந்தியாவுக்கு அனைத்து கோப்பைகளையும் வென்று தந்த தோனி தான் என்று மறு பிரிவினரும் கூறி வருவார்கள்

வெற்றி

வெற்றி

இந்த பட்டியலில் தற்போது புதியதாக இடம்பிடித்துள்ளார் கேப்டன் விராட் கோலி. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என அந்நிய மண்களில் வெற்றிகளை குவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இந்தியாவை தோற்கடிப்பது கடினம் என்று விராட் கோலி தான் நிருபித்துள்ளார்

சாதனை

சாதனை

2012ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் நடைபெற்ற எந்த டெஸ்ட் தொடரையும் இந்தியா தோற்றதில்லை. தொடர்ந்து 14 டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 66 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு தலைமை தாங்கிய விராட் கோலி,39 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 16 போட்டிகளில் தோல்வியையும் 11 போட்டிகளில் டிராவையும் செய்துள்ளார்.

முதலிடம்

முதலிடம்

இந்த பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ள தோனி, 60 போட்டிக்கு தலைமை தாங்கி 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 18 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளார். கங்குலி 49 போட்டிகளில் தலைமை தாங்கி 21 போட்டிகளில் வென்றுள்ளார். இதனால் விராட் கோலி தான் தொடர்ந்து டெஸ்ட் அணிக்காக கேப்டனாக தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Recommended Video

Dhoni Meets Yuvraj Singh; Insta Video Goes Viral | OneIndia Tamil
இர்பான்

இர்பான்

இதனிடையே சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள இர்பான் பதான், நான் ஏற்கனவே கூறியதை தான் திரும்பவும் சொல்கிறேன். விராட் கோலி தான் இந்தியாவுக்கு கிடைத்த சிறந்த டெஸ்ட் கேப்டன். அவருடைய வெற்றி சதவீதம் 59ஆக உள்ளது. இரண்டாவது இடத்தில் இருப்பவர்களின் வெற்றி சதவீதம் 45 தான் என்று கூறியுள்ளார். இதனால் இவ்வளவு நாள் அமைதியாக இருந்த ரசிகர்கள் திரும்பவும் யார் பெஸ்ட் என்று மோதி கொண்டனர்.

Story first published: Wednesday, December 8, 2021, 12:18 [IST]
Other articles published on Dec 8, 2021
English summary
2007 T20 WC Winner Irfan Pathan Feels Virat Kohli is the Best Test captain india ever had. Virat kohli has Highest winning Percentage than his Seniors
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X