For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒருநாள் போட்டிகளிலிருந்து விலக கோலி முடிவு..?? கேப்டன் பதவி பறிப்பால் அதிருப்தி..!!

மும்பை: இந்திய கிரிக்கெட் ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியின் பதவி பறிக்கப்பட்டது.

Recommended Video

Team India new captain Rohit Sharma says virat kohli is still a leader of the team | Oneindia Tamil

தென்னாப்பிரிக்க தொடர் முதல் ரோகித் சர்மாவே கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்! புஜாராவின் அதிரடி.. அஜாசின் 10 விக்கெட் சாதனை.. நியூசிலாந்தின் பரிதாபம்.. இன்று நடந்த 3 அறிய விஷயம்!

பி.சி.சி.ஐ.யின் இந்த நடவடிக்கை விராட் கோலி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் கோலி டெஸ்ட் அணி கேப்டனாகவே தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌனம்

மௌனம்

இந்த நிலையில் கேப்டன் பதவியை விட்டு தாங்களே விலகுமாறு விராட் கோலிக்கு பி.சி.சி.ஐ. கெடு விதித்ததாகவும், , இதற்கு அவர் உடன்படாததால் பி.சி.சி.ஐ.யே இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இதுவரை விராட் கோலி கேப்டன் பதவி பறிக்கப்பட்டது குறித்து எந்த ஒரு விளக்கமோ, சமூக வலைத்தளத்தில் பதிவோ வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார்.

அதிருப்தி

அதிருப்தி

கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் யாரும் தம்மிடம் ஏதும் பேசவில்லை என்று அதிருப்தியிலும், மன வருத்தத்திலும் விராட் கோலி உள்ளார். இதனால் தனது டெஸ்ட் கேப்டன் பதவியையும் விராட் கோலி ராஜினாமா செய்ய முடிவு எடுத்து, ஒரு வீரராக தொடர முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது

விலக முடிவு

விலக முடிவு

மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலிருந்து விலக முடிவு எடுத்துள்ள விராட் கோலி, சிறிது காலத்திற்கு டெஸ்டில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இல்லையேனில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க விராட் கோலி முடிவு எடுப்பார் என்ற தகவலும் வெளியாகிறது.

சவால்

சவால்

தோனி, ஒருநாள் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததுடன் மட்டுமல்லாமல், விராட் கோலியை புகழ்ந்து ஆதரவு அளிப்பேன் என்று தெரிவித்தார். ஆனால் விராட் கோலி அப்படி ஒரு பதிவையும் வெளியிடவில்லை. இதனால் இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் இரு துருவங்களாக பிரிந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் பயிற்சியாளர் டிராவிட்டுக்கு மிகப் பெரிய சிக்கல் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலியை சமதானப்படுத்தி, அனைத்து போட்டிகளிலும் விளையாட வைப்பதே அவருக்கு பெரிய சவலாக இருக்கும்.

Story first published: Thursday, December 9, 2021, 16:39 [IST]
Other articles published on Dec 9, 2021
English summary
Virat Kohli is Upset with BCCI descision and He did not respond to the BCCI decision. Virat kohli is Planning to take a break from international cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X