For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“உலகின் 4வது சிறந்த கேப்டன்” புதிய சரித்திரம் படைத்த விராட் கோலி..ஜாம்பவான்கள் வரிசையில் சேர்ந்தார்

சென்னை: உலகின் டெஸ்ட் வரலாற்றில் சிறந்த டெஸ்ட் கேப்டன்கள் வரிசையில் விராட் கோலி 4வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

Recommended Video

Kohliயின் சரித்திர சாதனை! Ponting,Waugh, Smith வரிசையில் சேர்ந்தார் | OneIndia Tamil

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2021ஆம் ஆண்டின் டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்..!! முதலிடம் யாருக்கு?2021ஆம் ஆண்டின் டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்..!! முதலிடம் யாருக்கு?

இதன் மூலம் விராட் கோலியின் தலைமையில் இந்திய டெஸ்ட் அணி 40வது வெற்றியை பதிவு செய்தது. இது இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாது உலக கிரிக்கெட்டிலும் புதிய மைல்கல்லாகும்.

வெற்றிகரமான கேப்டன்கள்

வெற்றிகரமான கேப்டன்கள்

டெஸ்ட் கிரிக்கெட் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை மொத்தம் 3 கேப்டன்கள் மட்டுமே 40 வெற்றிகளுக்கு மேல் பெற்றுக்கொடுத்தவர்கள் பட்டியலில் இருந்தனர். அதாவது தென்னாப்பிரிக்காவின் க்ரீம் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோர் அந்த பெருமையை பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

வெற்றி பட்டியல்

வெற்றி பட்டியல்

கிரீம் ஸ்மித் - 109 போட்டிகள் / 53 வெற்றிகள் / 29 தோல்விகள் / வெற்றி சதவீதம் % 48.62

ரிக்கி பாண்டிங் - 77 போட்டிகள் / 48 வெற்றிகள் / 16 தோல்விகள் / %62.33

ஸ்டீவ் வாக் - 57 போட்டிகள் / 41 வெற்றிகள் / 9 தோல்விகள் / % 71.92

விராட் கோலி - 67 போட்டிகள் / 40 வெற்றிகள் / 16 தோல்விகள் / %59.70

நம்பர் 1 இடம் பிடிக்கலாம்

நம்பர் 1 இடம் பிடிக்கலாம்

உலகின் தலைசிறந்த டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை விராட் கோலியால் பெற முடியும். கோலிக்கு தற்போது வயது 33 மட்டுமே ஆகிறது. இன்னும் 5 ஆண்டுகள் எப்படியும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருப்பார். இதனால் 14 வெற்றிகளை எடுத்துவிட்டால் கிரீம் ஸ்மித்தை முந்தி அந்த வரலாற்று சாதனைகளை படைக்கலாம்.

அடுத்த 2 ஆண்டுகள்

அடுத்த 2 ஆண்டுகள்

தென்னாப்பிரிக்க தொடரை வைத்தே இந்த பட்டியலில் விராட் கோலியால் 3வது இடத்திற்கு முன்னேற முடியும். அந்த அணிக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட்களில் ஏதேனும் ஒரு வெற்றியை பதிவு செய்தாலே ஸ்டீவ் வாக்-ஐ (41) முந்திவிடலாம். இதன் பின்னர் 2022ம் ஆண்டில் இந்திய அணிக்கு சொந்த மண்ணிலேயே 3 டெஸ்ட் தொடர்கள் உள்ளது. அதன்பின்னர் 2023ம் ஆண்டிலும் டெஸ்ட் தொடர்கள் அதிகம் இருக்கலாம் என்பதால் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் விராட் கோலி புதிய சரித்திரம் படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, December 31, 2021, 13:20 [IST]
Other articles published on Dec 31, 2021
English summary
After the centurion victory, Virat kohli joins in the Most Succesful Test Captain list, Currently at No. 4th
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X