இங்கிலாந்து போயாச்சு.. "ஸ்ட்ரிக்ட்" பயோ-பபுள் ரூல்ஸ் தொடங்கியாச்சு - ஆண்டவா முடியல!

லண்டன்: நான்கு மாத நீண்ட சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக, இங்கிலாந்தில் இன்று தரையிறங்கியுள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

பிறந்த மண் தென்.ஆ.. விளையாடுவது நியூசி.,க்கு.. 3 வருட தவம் - கோலி எதிர்பார்க்காத பிறந்த மண் தென்.ஆ.. விளையாடுவது நியூசி.,க்கு.. 3 வருட தவம் - கோலி எதிர்பார்க்காத

அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. அதேசமயம், பெண்கள் அணியும் அங்கு ஒரு டெஸ்ட் போட்டி , 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில், ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் நேற்று (ஜூன்.2) நள்ளிரவு மும்பையில் இருந்து இங்கிலாந்து கிளம்பிச் சென்றனர். .

 லோகேஷ் ராகுல் ட்வீட்

லோகேஷ் ராகுல் ட்வீட்

இந்த நிலையில், இன்று பிற்பகல் இந்திய அணி பயணித்த சார்ட்டர் விமானம் பத்திரமாக லண்டனில் தரையிறங்கியது. குடும்பம் குடும்பமாக நம்ம வீரர்கள் லண்டனில் காலெடுத்து வைத்தனர். இந்திய பெண்கள் அணியும், ஆண்கள் அணியும் ஒரே விமானத்தில் வெளிநாட்டு கிரிக்கெட் தொடருக்கு பயணித்தது இதுவே முதன் முறையாகும். வீரர்கள் லண்டன் சென்றதை உறுதிப்படுத்தும் விதமாக, இந்திய வீரர் லோகேஷ் ராகுல், தனது ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 மீண்டும் சோதனை

மீண்டும் சோதனை

Bio-safety நெறிமுறைகளின்படி, இங்கிலாந்து அரசு மற்றும் பொது சுகாதார இங்கிலாந்து தேவைகளுக்கு ஏற்ப, இந்திய அணி, சார்ட்டர் விமானத்தில் இங்கிலாந்து சென்றது. வீரர்கள் அனைவரும் பி.சி.ஆர் சோதனை நெகட்டிவ் ரிசல்ட்டை கொண்டுச் சென்றனர். இதையடுத்து, இந்திய ஆண்கள் அணி நேரடியாக ஹாம்ப்ஷயர் Bowl-ல் உள்ள ஹோட்டலுக்குச் சென்றார்கள். அங்கு அவர்கள் மீண்டும் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

 பயோ-பபுள் விதிமுறை

பயோ-பபுள் விதிமுறை

ஹோட்டலில் அவர்கள் தனிமைப்படுத்தப்படும் போது, வழக்கமான சோதனைகள் நடத்தப்படும். ஒவ்வொரு முறையும் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததென்றால், படிப்படியாக வீரர்களின் செயல்பாடுகள் அதிகரிக்கப்படும். முதலில் சிறிய சிறிய குழுக்களாக உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பிறகு குழுவின் அளவு அதிகரிக்கப்படும். எனினும், கடுமையான பயோ-பபுள் விதிமுறை பின்பற்றப்படும்.

 171 அறைகள்

171 அறைகள்

இந்திய வீரர்கள் தங்கியிருக்கும் சவுத்தாம்ப்டன் 'Ageas Bowl' ஸ்டேடியம் வெறும் மைதானம் மட்டும் அல்ல. அந்த ஸ்டேடியத்தில் சகல வசதியும் கொண்ட நட்சத்திர ஹோட்டலும் உள்ளது. ஹோட்டல்-னா நீங்க நினைக்கிற மாதிரி சாதாரணமானது இல்லீங்க. ஏசி ரூமில் படுத்துக் கொண்டே, பக்கா வியூவில் நீங்கள் போட்டியை உங்கள் அறையில் இருந்தே பார்க்க முடியும். அதற்கு ஏற்றார் போல் தான் அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஸ்டேடியத்தில், 2011ம் ஆண்டு இங்கிலாந்து - இலங்கை இடையே முதல் டெஸ்ட் போட்டி நடந்தாலும், ஹோட்டல் 2015 வரை திறக்கப்படவே இல்லை. 3 தளங்கள் கொண்ட இந்த ஹோட்டலில், மொத்தம் 171 அறைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பால்கனி இருக்கிறது. அதேபோல், இந்த 171 அறையில் இருந்தும் போட்டியை நீங்கள் நேரடியாக கண்டு ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian teams land in London for England tour - இந்திய அணி
Story first published: Thursday, June 3, 2021, 18:40 [IST]
Other articles published on Jun 3, 2021

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X