For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சரியான முடிவைத்தான் எடுத்துருக்காரு... இதை நினைச்சு அவர் பின்னாடி சந்தோஷப்படுவாரு!

சிட்னி : இந்திய -ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் பகலிரவு போட்டியில் மட்டும் விளையாடவுள்ள கேப்டன் விராட் கோலி தொடர்ந்து தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ளார்.

அவருக்கு பதிலாக ரஹானே கேப்டன் பொறுப்பை வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அணியில் ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பும் விராட்டின் முடிவு சரியானது என்று அணியின் தலைமை கோச் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி

ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் வரும் 27ம் தேதி துவங்கி, 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு பகலிரவு போட்டி உள்ளிட்ட 4 டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்திய வீரர்கள் சிட்னியில் குவாரன்டைனில் உள்ளனர். பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

பலம் குறையும் என கருத்து

பலம் குறையும் என கருத்து

டெஸ்ட் தொடர் டிசம்பர் 17ம் தேதி துவங்கவுள்ள நிலையில், அதன் முதல் பகலிரவு போட்டி அடிலெய்டில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்று விளையாடவுள்ள கேப்டன் விராட் கோலி, அடுத்து தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பவுள்ளார். இதையடுத்து அணியின் பலம் குறையும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

ரவி சாஸ்திரி பாராட்டு

ரவி சாஸ்திரி பாராட்டு

இதனிடையே, கோலி இல்லாதது மிகப்பெரிய இழப்புதான் என்று அணியின் தலைமை கோச் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆனால் கோலி சரியான முடிவைத்தான் எடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். பின்னாளில் இதுகுறித்து அவர் மகிழ்ச்சியே அடைவார் என்றும் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

விராட் கோலியே காரணம்

விராட் கோலியே காரணம்

இஎஸ்பிஎன்னின் ஏபிசி ஸ்போர்டிற்காக பேசிய ரவி சாஸ்திரி, கடந்த 5 -6 ஆண்டுகளில் இந்தியா பெற்றுள்ள சிறப்புகளுக்கு விராட் கோலியே காரணம் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் அணியில் பல இளம் வீரர்கள் உள்ள நிலையில், விராட் இல்லாத இந்த சூழலில் அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சேர்ப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சேர்ப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 17ம் தேதி துவங்கவுள்ள நிலையில், அணியில் ரோகித் சர்மா, ரஹானே உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புள்ளிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சேர்க்கப்படவுள்ளது.

Story first published: Monday, November 23, 2020, 12:13 [IST]
Other articles published on Nov 23, 2020
English summary
The first Test between India and Australia will begin from December 17 at the Adelaide Oval
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X