For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பயிற்சி போட்டிகளில் இந்தியா இந்த ஐடியாக்களை செயல்படுத்தலாம்..!! கேப்டன் கோலிக்கு ஒரு ஆலோசனை

லண்டன்:உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் வங்க தேசம் அணிகளுடன் மோதுகிறது. அதற்கான சில வெற்றி வியூகங்களை வகுப்பது அவசியம். அவை என்னவென்று ஒரு சிறு அலசல்...

3வது முறையாக உலக கோப்பையை தன்வசமாக்கி கொள்ள வேண்டும் வெல்லும் நோக்கில் இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. வரும் 5ம் தேதி, தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது. அதற்கு முன்பாக நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது.

உலகின் தலைசிறந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் அணி, 2015ம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பிறகு அதிக ஒருநாள் போட்டிகளை வென்ற 2வது அணி என்ற சாதனைகளை இந்தியா தொட்டுள்ளது. இந்தியா பயிற்சி ஆட்டங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்று வியூகங்களை பார்க்கலாம்.

என்னங்க இது.. உலகக்கோப்பையை வாங்கிட்டு வர சொன்னா.. வேற கோப்பையோட உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க? என்னங்க இது.. உலகக்கோப்பையை வாங்கிட்டு வர சொன்னா.. வேற கோப்பையோட உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க?

4வது வரிசையில் யார்?

4வது வரிசையில் யார்?

இந்திய அணியின் 4வது இடத்தில் விஜய் சங்கர் இறங்க வாய்ப்பிருக்கிறது. ஐபிஎல் தொடரை வைத்து கணக்கிட்டால், மோசமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தியவர் விஜய் சங்கர். கே.எல். ராகுலோ சிறப்பான அதிரடி ஆட்டத்தை தந்தவர். எனவே ராகுலை 4ம் வீரராக விளையாட வைக்கலாம்.

மிடில் ஆர்டர் பேட்டிங்

மிடில் ஆர்டர் பேட்டிங்

அதே நேரத்தில் ராகுல் மிடில் ஆர்டரில் சொதப்பியவர். எனவே விஜய் சங்கரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக 5 முதல் நம்பர் 7 வரையிலான அனைத்து இடங்களில் விளையாட வைக்கலாம். அதன்மூலம் இவர்களின் மிடில் ஆர்டர் பேட்டிங் திறனை சோதித்து பார்க்கலாம்.

சமி வந்தது எப்படி?

சமி வந்தது எப்படி?

அடுத்ததாக பவுலிங் யூனிட்டில் சில விஷயங்களை பரிசோதித்து பார்க்கலாம். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய இருவரும் தொடக்க பவர்பிளே ஓவரிலும், டெத் ஓவர்களிலும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு வந்தனர். இருவரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலும் அது டேஞ்சர் தான். அதற்காக தான், அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியை அணியில் பிடித்து போட்டிருக்கிறது பிசிசிஐ.

அருமையான பவுலிங்

அருமையான பவுலிங்

ஆனால்.. ஒரு விஷயத்தை நாம் இங்கு ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அதாவது.. 2015 முதல் 2018வரை உள்ள ஆண்டுகளில் சமி 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அதிலும் சிறப்பாக ஆடி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் டெத் ஓவரில் மிகவும் அருமையாக பந்துவீச்சை தந்திருக்கிறார்.

கோலி முடிவு செய்யலாம்

கோலி முடிவு செய்யலாம்

இரண்டு பேருமே சர்வதேச தரத்திலான திறமையை பெற்றவர்கள். எனவே, இருவரில் ஒருவரை மட்டுமே வழக்கமான வேகப்பந்து வீச்சாளராக அணியில் தொடர முடியும். இந்த பயிற்சி ஆட்டத்தின் மூலம் கோலி அதனை முடிவு செய்து கொள்ளலாம்.

மீண்டு வந்த கேதர்

மீண்டு வந்த கேதர்

இறுதியாக, கேதார் ஜாதவிற்கு போதுமான பேட்டிங்கையும், விஜய் சங்கருக்கு போதுமான பௌலிங்கையும் அளிக்கலாம். ஏன் என்றால்... கேதர் ஜாதவ் ஒரு சிறந்த அனுபவ பேட்ஸ்மேன். ஆனால் ஐபிஎல் தொடரில் அவரது பார்ம் படு மோசம். தற்போது காயத்தில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்யிருக்கிறார். மிடில் ஆர்டரில் அவருக்கு பேட்டிங் வழங்கலாம்.

பவுலிங் வாய்ப்பு

பவுலிங் வாய்ப்பு

ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டு விட்டாலோ அல்லது மோசமான பவுலிங்கை வெளிபடுத்தினாலோ சிக்கல். அந்த கட்டத்தில் விஜய் சங்கரின் பவுலிங் கைகொடுக்கும். பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு அவரது ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். இந்த யோசனைகளை கோலி பயற்சி ஆட்டத்தில் செயல்படுத்தி பார்க்கலாம்.

Story first published: Friday, May 24, 2019, 19:26 [IST]
Other articles published on May 24, 2019
English summary
Virat kohli may go for some trails in warm up matches to get an idea for world cup 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X