For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலிக்கு தான் மீண்டும் மகுடம்..? ரோகித்துக்கு அல்வா..? பிசிசிஐயில் நடக்கும் பரபர பின்னணி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் 3 வகையான போட்டிகளுக்கும் கோலியே கேப்டனாக இருப்பார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

உலக கோப்பையில் லீக் சுற்றில் கலக்கிய இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. அதனால் இந்திய அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் விழுந்தன.

தோனியை மிடில் ஆர்டரில் இறக்கிவிடாமல், கடைசி கட்டத்தில் இறக்கிவிட்டது தவறான முடிவு என்று சச்சின் தனது கருத்தை தெரிவித்திருந்தார். பலரும் தோனியின் பேட்டிங் குறித்து விமர்சனங்களை எழுப்பி இருந்தனர்.

வெளியான சர்ச்சை

வெளியான சர்ச்சை

இதையடுத்து, கோலி டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாகவும், ரோகித் ஷர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாகவும் செயல்பட போவதாக புதிய சர்ச்சை வெடித்தது. 2007 -ம் ஆண்டு முதல் 2008 -ம் ஆண்டு வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தோனி கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிக்கு அனில் கும்ளே கேப்டனாகவும் செயல்பட்டனர்.

3 போட்டி தொடர்

3 போட்டி தொடர்

அதேபோல் 2015 -ம் ஆண்டு முதல் 2017 ம் ஆண்டு வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தோனி கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு கோலி கேப்டானகவும் இருந்தனர். அந்த முறை ஒத்துவராததால் 3 வகையான போட்டிகளுக்கும் ஒரே வீரர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

மாற்றம் வரும்

மாற்றம் வரும்

இந்நிலையில் உலக கோப்பை தோல்விக்கு பின் இந்திய அணியில் கேப்டன் குறித்த சர்ச்சை வெடித்தது. இதனால் 3 வகையான போட்டிகளுக்கும் கேப்டன் முறையில் மாற்றம் வரும் என்று செய்திகள் வெளியாகின.

கோலி தான் கேப்டன்

கோலி தான் கேப்டன்

ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, டி 20 என 3 வகை கேப்டன்கள் என்று தகவல்கள் கசிந்தன. கோலிக்கு பதிலாக ரோகித் தான் கேப்டன் தான் என்று கூறப்பட்டது. இந் நிலையில், கோலியே கேப்டனாக தொடர்வார் என கூறப்படுகிறது.

தள்ளி வைப்பு

தள்ளி வைப்பு

இன்று நடக்க இருந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வீரர்கள் தேர்வு ஞாயிற்று கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய கூட்டத்தில் வீரர்கள் தேர்வு, கேப்டன்ஷிப் போன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆக மொத்தம் ரோகித்துக்கு கேப்டன் பதவி இல்லை என்பது தான் இப்போதைய செய்தி.

Story first published: Friday, July 19, 2019, 15:19 [IST]
Other articles published on Jul 19, 2019
English summary
VIrat kohli may retain as captain in all 3 formats bcci sources said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X