For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி போட்ட ஒரே ஒரு புகைப்படம்.. சர்ச்சை மேல் சர்ச்சை.. கிண்டலோ கிண்டல்.. பின்னணி என்ன?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

Recommended Video

இணையத்தில் கிண்டலுக்கு உள்ளான விராட் கோஹ்லி வெளியிட்ட புகைப்படம்

லண்டன்: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

பொதுவாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி நிறைய விளையாட்டுகள் மீது ஆர்வம் கொண்டவர். அதில் முக்கியமானது கால்பந்து மற்றும் டென்னிஸ். தனக்கு உலகிலேயே ரோனால்டோ, ரோஜர் பெடரர் ஆகியோரை அதிகம் பிடிக்கும் என்று இவரே கூறி இருக்கிறார்.

Virat Kohli meets Harry Kane: Twitter mocks IND captain as a Kohli Curse

அதே போல் உலகில் சில முக்கியமான கால் பந்து அணிகளுக்கு இவர் ஆதரவாக பேசி இருக்கிறார். கடந்த கால் பந்து உலகக் கோப்பை போட்டியில் இவர் இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கோலியை இதை வைத்துதான் எல்லோரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

பொதுவாக கோலி ராசி இல்லாத நபர் என்ற விஷயம் இணையத்தில் உலவி வருகிறது. இவருக்கு ராசி இல்லாத காரணத்தால்தான் பெங்களூர் அணி ஐபிஎல் போட்டியில் ஜொலிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அந்த அணியில் நல்ல வீரர்கள் இருந்தும் இதனால்தான் வெற்றிபெற முடியவில்லை என்கிறார்கள்.

அதேபோல்தான் கோலி, கடந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக பேசிய பின், இங்கிலாந்து எப்போதும் போல இல்லாமல் மிக மோசமாக தோல்வி அடைந்தது. இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன், பிரபல கால்பந்து கிளப்பான டொட்டேன்ஹெம் ஹாட்ஸ்பர் அணியின் முன்னணி வீரரான ஹர்ரி கேனை சந்தித்தார்.

இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று டிவிட்டரில் பேசிக்கொண்டு இருந்தனர். ஹர்ரி கேன் மற்றும் விராட் கோலி இருவரும் லண்டனில் சந்தித்துக்கொண்டார்கள்.

காயத்தால் தென் ஆப்ரிக்கா போட்டியில் கோலி விளையாடுவதில் சிக்கல்? மாற்று வீரராக 5 பேர் பரிசீலனை காயத்தால் தென் ஆப்ரிக்கா போட்டியில் கோலி விளையாடுவதில் சிக்கல்? மாற்று வீரராக 5 பேர் பரிசீலனை

ஆனால் அதற்கு அடுத்து நடந்த சாம்பியன்ஸ் ஸ்லீப் கால்பந்து போட்டியில் டொட்டேன்ஹெம் ஹாட்ஸ்பர் அணி மோசமாக தோல்வி அடைந்தது. இதற்கு தற்போது விராட் கோலி மற்றும் ஹர்ரி கேன் சந்திப்புதான் காரணம் என்று கூறி வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் சந்தித்தால்தான் இப்படி நடந்தது. விராட் கோலியின் ராசி அப்படி, அதுதான் கேனை துரத்துகிறது என்று கிண்டல் செய்து வருகிறார்கள். இதற்காக #KohliCurse என்று கோலியின் சாபம் என்று டேக் உருவாக்கி இருக்கிறார்கள். பலர் இதில் கோலிக்கு எதிராக கிண்டலாக நிறைய கமெண்டுகளை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 2, 2019, 17:34 [IST]
Other articles published on Jun 2, 2019
English summary
Virat Kohli meets Harry Kane in London: Twitter mocks IND captain as a Kohli Curse.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X