For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலிக்கு வாழ்க்கை வட்டமானது..!! கோலி செய்த தவறுகள்..!!

சென்னை: வாழ்க்கை ஒரு வட்டம் என்று தொடங்கும் வசனம் திருமலை திரைப்படத்தில் விஜய் பேசியது விராட் கோலிக்கு பொருந்தி இருக்கிறது

Recommended Video

Captaincy மாற்றத்தின் பின் Rohit-ன் சம்பளம் என்ன? | Oneindia Tamil

இந்திய கிரிக்கெட்டில் தனக்கு நிகரான ஆளே இல்லாத ராஜாவாக திகழ்ந்தார் விராட் கோலி..

விராட் கோலி இது வேண்டும்.. இது வேண்டாம் என்று சொன்னால், பி.சி.சி.ஐ.யும் அதை அப்படியே செய்யும். கடந்த 5 ஆண்டுகளாக கதை அப்படி தான் சென்றது.

“சதம் அடித்தால் மட்டும் போதுமா? கோப்பை வேணாமா?” கோலி ரசிகர்களுக்கு ரோகித் 'மறைமுக' பதிலடி! “சதம் அடித்தால் மட்டும் போதுமா? கோப்பை வேணாமா?” கோலி ரசிகர்களுக்கு ரோகித் 'மறைமுக' பதிலடி!

கும்ப்ளே

கும்ப்ளே

கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அணிக்கு பயிற்சியாளரை தேர்ந்து எடுக்கும் பொறுப்பு கங்குலி, சச்சின், வி.வி.எஸ். லட்சுமணன் ஆகியோருக்கு வழங்கபபட்டது. அப்போது ரவி சாஸ்த்ரி இண்டர்வியூவிற்கு நேரில் வராமல், ஏதோ சுற்றுலா தளத்திலிருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். இதனால் கடுப்பான கங்குலி குழு, கும்ப்ளேவிற்கு பயிற்சியாளர் பொறுப்பை வழங்கியது.

கோலி புகார்

கோலி புகார்

ஆனால் கும்ப்ளே எங்களுக்கு சரிப்பட்டு வரமாட்டார், எங்களுக்கு ரவி சாஸ்த்ரி தான் மீண்டும் பயிற்சியாளராக வேண்டும் என்று விராட் கோலி பி.சி.சி.ஐ.க்கு தன்னிச்சையாக கடிதம் எழுதினார். இதனை சற்றும் எதிர்பாராத கும்ப்ளே கனத்த மனதுடன் விலகுவதாக அறிவித்தார். அந்த பொறுப்புக்கு மீண்டும் ரவி சாஸ்த்ரியையே வர வைத்தார் கோலி. விராட் கோலியின் இந்த செயல் அப்போதே கங்குலி உள்ளிட்ட மூத்த வீரர்களை அதிருப்தி அடைய செய்தது.

தவறு

தவறு

கோலி, ரவி சாஸ்த்ரி ஜோடி தாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற போக்கில் நடந்தது. 2017-18 தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் புஜாராவை ஒரு போட்டியில் வெளியே அனுப்பியது, இந்த ஆண்டு இங்கிலாந்து தொடரின் போது அனைவரின் யோசனைகளையும் நிராகரித்து அஸ்வினை அணியில் சேர்க்காமல் இருந்தது என தொடர்ந்து கேப்டனாக பல தவறுகளை செய்தார்.

சீனியர் வீரர்கள்

சீனியர் வீரர்கள்

2019 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா 5 சதம் அடிக்க விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஐ.பி.எல். தொடரில் ரோகித் கோப்பையை கைப்பற்ற, அதிலும் கோட்டைவிட்டார் கோலி, இதனாலேயே கோலியைவிட ரோகித் பெஸ்ட் கேப்டன் என்று அனைவரின் மனதிலும் ஓடியது. ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு விராட் கோலி சீனியர்களை வெளிப்படையாக குறை கூறினார். இதனால் கடுப்பான மூத்த வீரர்கள் கோலியின் நடத்தை குறித்து பி.சி.சி.ஐ.யிடம் புகார் அளித்தனர்

மெகா தவறுகள்

மெகா தவறுகள்

மேலும் கிரிக்கெட் போட்டிகள் முடிந்தவுடன் விராட் கோலி அவருடைய உலகத்திற்கு சென்றுவிடுவதாகவும், அவரை அணுக கூட முடியவில்லை என்ற குற்றச்சாட்டையும் விரர்கள் வைத்தனர். நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் கூட வாழ்வா? சாவா? என்ற நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கூட பேட்டிங் வரிசையை மாற்றி சூடு போட்டு கொண்டார் கோலி. இதனால் ஏற்கனவே விராட் கோலி மீது அதிருப்தியில் இருந்த பி.சி.சிஐ. தற்போது ஒருநாள் அணி கேப்டன் பதவியிலிருந்தும் நீக்கியுள்ளது.

Story first published: Thursday, December 9, 2021, 16:43 [IST]
Other articles published on Dec 9, 2021
English summary
Virat kohli had a brilliant overall record as ODI captain But His continuous mistakes as captain and His desire to be Monopoly captain cost his status
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X