ரோகித்தை தூக்க சொன்ன கோலி? பிசிசிஐ- யிடம் வற்புறுத்தல்.. விட்டு விளாசும் ரசிகர்கள்!

சென்னை: இந்திய அணியின் துணைக்கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்குமாறு பிசிசிஐ-யிடம் கோலி வற்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Who can replace Virat Kohli as India's T20 Captain? | OneIndia Tamil

இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக இருந்த விராட் கோலி நேற்று டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார்.

இப்படியா ஆடுவாங்க? அரைசதம் போட்டு ஆப்பு வைத்த தவான்.. வெறுத்துப் போன டெல்லி ரசிகர்கள்!இப்படியா ஆடுவாங்க? அரைசதம் போட்டு ஆப்பு வைத்த தவான்.. வெறுத்துப் போன டெல்லி ரசிகர்கள்!

கோலியின் முடிவு

கோலியின் முடிவு

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு மிக முக்கிய காரணமாக ரோகித் சர்மா என்றே கூறலாம். ஐபிஎல் தொடரில் கோலியை விட ரோகித் சர்மா சிறப்பான கேப்டன்சியை செய்வதால் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வழுத்துவந்தன. எனவே கோலி தற்போது பதவி விலகியுள்ளதால், அவருக்கு அடுத்தபடியாக 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா ஏற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

 விராட் கோலி கோரிக்கை

விராட் கோலி கோரிக்கை

இந்நிலையில் இந்திய ஒருநாள் அணியில் துணை கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்க வேண்டும் என விராட் கோலி, தேர்வுக் குழுவிடம் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மாவிற்கு 34 வயதாவதால், அவருக்குப் பதிலாக கே.எல். ராகுலை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என விராட் கோலி தேர்வுக்குழுவைக் கேட்டுக்கொண்டதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி20 அணியிலும் கோரிக்கை

டி20 அணியிலும் கோரிக்கை

இதே போல டி20 அணியிலும் தனக்கு துணையாக ரிஷப் பண்ட்- ஐ துணைக் கேப்டனாக நியமிக்குமாறும் கோலி நிர்பந்தித்துள்ளார் எனக்கூறப்படுகிறது. விராட் கோலிக்கு தற்போது வயது 32 ஆகிறது. இதன் மூலம் கோலிக்கும் - ரோகித் சர்மாவுக்கு இடையே உள்ள பிரச்னை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோலிக்கு இருக்கும் சிக்கல்

கோலிக்கு இருக்கும் சிக்கல்

கோலி தனக்கு அடுத்தபடியாக யாராவது வளர்ந்து வந்தால் அவரை ஒதுக்கும் முயற்சியில் ஈடுபடுவார் என அவ்வபோது கருத்துக்கள் பரவி வருகிறது. அது தற்போது ரோகித் சர்மாவின் செயலின் மூலம் உண்மையாகியுள்ளதாக ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எது எப்படியிருந்தாலும் உலகக்கோப்பை டி20-யை வெல்லவில்லை என்றால் ஒருநாள் அணியின் கேப்டன்சியும் கோலியிடம் இருந்து பறிக்கப்படும் எனக்கூறப்படுகிறது.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 கணிப்புகள்
Match 5 - October 19 2021, 03:30 PM
ஸ்காட்லாந்து
பாபுவா நியூ கினி
Predict Now
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Report says Virat Kohli Mooted BCCI to remove Rohit Sharma from ODI Vice-captaincy
Story first published: Friday, September 17, 2021, 13:55 [IST]
Other articles published on Sep 17, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X