For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி உலக டி20 அணியின் கேப்டனாக கோஹ்லி தேர்வு.. ஆசிஷ் நேஹ்ராவும் அணியில் இடம் பிடித்தார்!

பெங்களூரு: ஐசிசி உலக டி20 அணியை ஐசிசி அறிவித்துளளது. அதன் கேப்டனாக விராத் கோஹ்லி அறிவிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணியின் கேப்டனாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டவரான ஸ்டெபானி டெய்லர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த உலக டி20 போட்டியின் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோஹ்லி என்பது நினைவிருக்கலாம். ஐசிசி உலக டி20 அணியில் 2 இந்தியர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. கோஹ்லியுடன், பந்து வீச்சாளர் ஆசிஷ் நேஹ்ராவும் இடம் பிடித்துள்ளார்.

மகளிர் உலக டி20 அணிக்கு மேற்கு இந்தியத் தீவுகளின் ஸ்டெபானி டெய்லர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகளிர் அணியில் ஒரு இந்தியருக்கும் இடம் கிடைக்கவில்லை என்பது சோகமானது.

அபார ரன் குவிப்பு

அபார ரன் குவிப்பு

விராத் கோஹ்லி உலகக் கோப்பைத் தொடரில் ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார். 273 ரன்களைக் குவித்திருந்தார். இவரது சிறப்பான ஆட்டம் காரணமாகவே இந்தியாவால் அரை இறுதி வரை முன்னேற முடிந்தது.

ஐசிசி உலக அணி

ஐசிசி உலக அணி

இந்த நிலையில் போட்டியின் நிறைவாக ஐசிசி உலக டி20 அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வர்னணையாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு இந்த அணிகளைத் தேர்வு செய்தது.

குழு

குழு

இந்தக் குழுவில் ஐசிசி பொது மேலாளர் ஜெப் அலார்டைஸ், முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் வேகப் பந்து வீச்சாளர் இயான் பிஷப், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசேன், முன்னாள் ஆஸ்திரேலிய வீராங்கனை மெல் ஜோன்ஸ், முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர், முன்னாள் ஆஸ்திரேலிய மகளிர் ஆல் ரவுண்டர் லிசா ஸ்தாலகர் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

ஆண்கள் அணி

ஆண்கள் அணி

ஆண்கள் அணியில் மொத்தம் 12 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் நான்கு பேர் இங்கிலாந்து வீரர்கள். இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகளிலிருந்து தலா 2 பேரும், ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவிலிருந்து தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.

மகளிர் அணி

மகளிர் அணி

மகளிர் மணியில் நியூசிலாந்து வீராங்கனைகள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகளிலிருந்து தலா 2 பேர் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்காவிலிருந்து தலா ஒரு வீராங்கனை இடம் பெற்றுள்ளார்.

கோஹ்லி.. ஸ்டெபானி

கோஹ்லி.. ஸ்டெபானி

ஆடவர் அணியின் கேப்டனாக கோஹ்லியும், மகளிர் அணி கேப்டனாக ஸ்டெபானி டெய்லரும் அறிவிக்கப்பட்டனர்.

ஆடவர் அணியில் யார் யார்?

ஆடவர் அணியில் யார் யார்?

ஆடவர் அணி விவரம்: ஜேசன் ராய் (இங்கிலாந்து), குவின்டன் டி காக் (தெ.ஆ.), விராத் கோஹ்லி (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), ஆண்ட்ரே ரஸ்ஸல் (மே.இ. தீவுகள்), மிட்சல் சான்ட்னர் (நியூசிலாந்து), டேவிட் வில்லி (இங்கிலாந்து), சாமுவேல் பத்ரி (மே.இ. தீவுகள்), ஆசிஷ் நேஹ்ரா (இந்தியா). 12வது வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் (வங்கதேசம்).

மகளிர் அணியில் யார் யார்?

மகளிர் அணியில் யார் யார்?

சூசி பேட்ஸ் (நியூசிலாந்து), சார்லட் எட்வர்ட்ஸ் (இங்கிலாந்து), மெக் லேனிங் (ஆஸி.), ஸ்டெபானி டெய்லர் (மே.இ. தீவுகள்-கேப்டன்), சோபி டிவைன் (நியூசிலாந்து), ராச்சல் பிரிஸ்ட் (நியூசிலாந்து), டியான்ட்ரா டாட்டின் (மே.இ. தீவுகள்), மேகன் ஸுட் (ஆஸி.), சூன் லூஸ் (தென் ஆப்பிரிக்கா), லீக் காஸ்பெரக் (நியூசிலாந்து), அன்யா ஷ்ரப்சோல் (இங்கிலாந்து). 12வது வீராங்கனை - ஆனம் அமின் (பாகிஸ்தான்)

Story first published: Monday, April 4, 2016, 16:28 [IST]
Other articles published on Apr 4, 2016
English summary
India's vice captain Virat Kohli has been named the captain of World T20 Team Of The Tournament.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X