மெகா சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி.. ஜஸ்ட் 71 ரன்கள் மட்டும் தேவை

அபுதாபி: விராட் கோலி பேட்டிங் மட்டும் இன்று க்ளிக் ஆகிவிட்டால், ஒரு மிகப்பெரும் சாதனையை டி20 போட்டிகளில் நிகழ்த்திவிடுவார்.

கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் அமீரகத்தில் நேற்று (செப்.19) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்திய நிலையில், இன்று கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்றிருக்கும் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், விராட் கோலி (c), தேவதத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (wk), வனிந்து ஹசரங்கா, சச்சின் பேபி, கைல் ஜேமீசன், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், யுவேந்திர சாஹல் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல், கொல்கத்தா அணியில் ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயன் மோர்கன் (c), ஆந்த்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் (wk), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எனினும், விராட் கோலி மற்றும் பெங்களூரு ரசிகர்கள் இந்த போட்டியை சற்று சோகம் கலந்த உணர்வுடனேயே பார்க்கப் போகிறார்கள். காரணம், பெங்களூரு அணியின் கேப்டனாக இதுதான் எனது கடைசி ஐபிஎல் தொடர் என்றும், ஒரு வீரராக மட்டும் அடுத்த வருடத்தில் இருந்து அணியில் தொடரப் போவதாக கோலி அறிவித்திருக்கிறார்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி செயல்பட்டாலும், அவரால் இந்தியாவுக்காக ஒரு ஐசிசி கோப்பையை கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை. சாம்பியன்ஷிப் டிராஃபி, 50 ஓவர் உலகக்கோப்பை தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என முக்கிய கட்டங்களில் கோலியின் கேப்டன்சி சொதப்பிவிடுகிறது. இதன் காரணமாக வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளார். இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடரிலும் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலக முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த போட்டித் தொடரில் கேப்டன் விராட் கோலி 71 ரன்கள் எட்டினால், டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் எனும் பெருமையைப் பெறுவார். அதுமட்டுமின்றி, உலகளவில் டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 5-வது பேட்ஸ்மேன் எனும் பெருமையையும் கோலி பெறுவார். தற்போது விராட் கோலி அனைத்துவித டி20 கிரிக்கெட்டிலும் மொத்தம் 311 போட்டிகளில் விளையாடி 9,929 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 133.95. இதில் 5 சதங்கள், 72 அரைசதங்களும் அடங்கும்.

 IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி - IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி -

டி20 போட்டிகளில் கிறிஸ் கெயில் 446 போட்டிகளில் 14,261 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் பொல்லார்ட் 561 போட்டிகளில் விளையாடி 11,159 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் ஒருசதம் 56 அரைசதங்கள் அடங்கும். பாகிஸ்தான் வீரர் ஷோயிப் மாலிக் 436 போட்டிகளில் 66 அரைசதங்கள் உள்ளிட்ட 10,080 ரன்கள் எடுத்து 3-வது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 304 போட்டிகளில் 10 ஆயிரத்து 17 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
kohli need 71 runs to cross 10,000 mark t20 cricket - கோலி
Story first published: Monday, September 20, 2021, 19:39 [IST]
Other articles published on Sep 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X