For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘என்கிட்ட ஒன்னுமே கேட்கல.. எதுவுமே தெரியாது”.. புதிய பயிற்சியாளர் விவகாரம்.. கோலி பேச்சால் சர்ச்சை!

அமீரகம்: இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டது கூறித்து முதல் முறையாக விராட் கோலி வாய்திறந்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. அடுத்தாண்டு சிஎஸ்கேவில் தோனி.. முக்கியமான முடிவை எடுத்த நிர்வாகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. அடுத்தாண்டு சிஎஸ்கேவில் தோனி.. முக்கியமான முடிவை எடுத்த நிர்வாகம்!

தற்போது பயிற்சியாளராக இருந்து வரும் ரவி சாஸ்திரி, மீண்டும் விண்ணப்பிக்க விருப்பம் தெரிவிக்காததால், அடுத்த பயிற்சியாளரை பிசிசிஐ அணுகியது.

புதிய பயிற்சியாளர்

புதிய பயிற்சியாளர்

இந்திய அணிக்கு தொடர்ந்து இரண்டு முறை ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். எனினும் இவரின் பயிற்சியில் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட இந்திய அணி வெல்லவில்லை. வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைவதால், இந்த முறை வேறு பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்தது.

கங்குலி திட்டவட்டம்

கங்குலி திட்டவட்டம்

இதற்காக முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே, ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், ஜெயவர்தனே உள்ளிட்ட வீரர்களிடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இறுதியில் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை புதிய தலைமை பயிற்சியாளராக அறிவித்தது பிசிசிஐ. அடுத்த 2 ஆண்டுகளுக்கு மட்டுமே இவரின் பதவிக்காலம் இருக்கும் எனத் தெரிகிறது.

வாய்திறந்த கோலி

வாய்திறந்த கோலி

டிராவிட் பயிற்சியாளராக வருவதில் விராட் கோலியின் மனநிலை என்ன என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் அதுகுறித்து வாய்த்திறந்துள்ளார். அதில், டிராவிட்டை பயிற்சியாளராக நியமிப்பது குறித்து யாரிடமும் இதுவரை கலந்தாலோசிக்கவே இல்லை. அந்த முனையில் என்ன நடக்கிறது என்பது குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என அதிருப்திகரமாக தெரிவித்துள்ளார்.

கோலிக்கு விருப்பம் இல்லையா?

கோலிக்கு விருப்பம் இல்லையா?

இந்த பதில் மூலம் விராட் கோலிக்கு இதில் உடன்பாடு இல்லை என்பது போல தெரிகிறது. இதற்கு முன்னர் அணில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்த போது கோலிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பதவி விலகினார். இதன் பின்னர் வந்த ரவி சாஸ்திரியுடன் கோலிக்கு நல்ல புரிதல் இருந்தது. அதனை தொடரவே கோலி விரும்புகிறார். வேறு புதிய கேப்டனை நியமிப்பதில் விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

Recommended Video

Sourav Ganguly explains MS Dhoni’s appointment as India’s mentor | OneIndia Tamil
டிராவிட்டின் அனுபவம்

டிராவிட்டின் அனுபவம்

ராகுல் டிராவிட் இந்திய ஏ அணி, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்திருக்கிறார். அதுமட்டுமல்ல சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இருந்து, சிறப்பாக செயல்பட்டார். இவர் தற்போது தேசிய அகாடமியின் தலைவராக இருக்கிறார். விரைவில் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, October 17, 2021, 15:24 [IST]
Other articles published on Oct 17, 2021
English summary
Former India captain Rahul Dravid has been appointed as the new head coach of the Indian cricket team for the following T20 World Cup series. Virat kohli expressed his Dravid appointed as new Coach for Team India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X