நம்பர் 1.. விட்ட இடத்தை பிடித்த கிங் கோலி.. ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆப்பு வைத்த பாகிஸ்தான்!

ICC Test Rankings: Virat Kohli reclaims No.1 Test rank

துபாய் : ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் தன் முதல் இடத்தை நழுவ விட்டார்.

இரண்டாம் இடத்தில் இருந்த விராட் கோலி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடித்த சதம் மூலமாக மீண்டும் முதல் இடத்தை பிடித்தார்.

பாகிஸ்தான் தொடர்

பாகிஸ்தான் தொடர்

ஸ்டீவ் ஸ்மித் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் சொதப்பியதால் தான் முதல் இடத்தை இழக்க நேரிட்டது. பாகிஸ்தான் அணி தொடரில் படுதோல்வி அடைந்தாலும், ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை விரைவாக வீழ்த்தி அவரது தரவரிசையை இறக்கி உள்ளது.

ஸ்மித் தடை

ஸ்மித் தடை

விராட் கோலி கடந்த ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் தடையில் இருந்த போது டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தை பிடித்தார். ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கும் வரை கோலி முதல் இடத்தில் இருந்தார்.

ஆஷஸ் தொடரில் அசத்தல்

ஆஷஸ் தொடரில் அசத்தல்

அதன் பின் ஆஷஸ் தொடரில் தடைக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த ஸ்டீவ் ஸ்மித், தன் கிரிக்கெட் வாழ்வின் மிகச் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

ஸ்மித் முதல் இடம்

ஸ்மித் முதல் இடம்

அந்த தொடரிலேயே டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து அசத்தினார். விராட் கோலி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். அதன் பின் கோலி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.

முந்த முடியவில்லை

முந்த முடியவில்லை

ஸ்டீவ் ஸ்மித்தை நெருங்கினாலும் வங்கதேச டெஸ்ட் தொடரின் முடிவு வரை அவரால் ஸ்மித்தை முந்த முடியவில்லை. அப்போது ஸ்டீவ் ஸ்மித் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஆடி வந்தார்.

ஸ்மித் சறுக்கல்

ஸ்மித் சறுக்கல்

பாகிஸ்தான் தொடரின் முதல் போட்டியில் 4 ரன்களும், இரண்டாவது போட்டியில் 36 ரன்களும் மட்டுமே எடுத்தார் ஸ்டீவ் ஸ்மித். அதனால், தரவரிசைப் புள்ளிகள் சரிவடைந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் 923 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

கோலி முதல் இடம்

கோலி முதல் இடம்

ஸ்மித்தை விட ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்ற விராட் கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடம் பிடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன் போட்டியில் ஸ்மித்துக்கு இணையாக தான் இருப்பதை கோலி நிரூபித்துள்ளார்.

ரோஹித் சறுக்கல்

ரோஹித் சறுக்கல்

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோஹித் சர்மா பத்தாம் இடத்தில் இருந்து பதினாறாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் வங்கதேச டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. புஜாரா தொடர்ந்து நான்காம் இடத்தில் நீடித்து வருகிறார்.

ரஹானே பின்தங்கினார்

ரஹானே பின்தங்கினார்

ரஹானே ஐந்தாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் சதம், முச்சதம் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அவரை பின்தள்ளி ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Virat Kohli pips Steve Smith to grab number 1 spot in ICC test batsmen ranking
Story first published: Wednesday, December 4, 2019, 16:44 [IST]
Other articles published on Dec 4, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X