ஆர்சிபிக்காக 200 போட்டிகள்... ஆர்சிபி தான் எல்லாமே... விராட் நெகிழ்ச்சி

ஷார்ஜா: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் ஆர்சிபி அணி மோதிய 31வது ஐபிஎல் லீக் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது.

இது விராட் கோலி ஆர்சிபிக்காக விளையாடிய 200வது போட்டி. இதுவரை அந்த அணிக்காக 185 ஐபிஎல் போட்டிகளிலும் 15 சாம்பியன் லீக் போட்டிகளிலும் விராட் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் டாஸ் போட்டபோது பேசிய விராட் கோலி, ஆர்சிபி அணி தனக்கு எல்லாமுமாக இருப்பதாகவும் இந்த உணர்ச்சியை மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.

எங்களையா டீமை விட்டு தூக்குனீங்க? ஆர்சிபி செய்த மாபெரும் தவறு.. பழி வாங்கும் வீரர்கள்!

200 போட்டிகளில் ஆட்டம்

200 போட்டிகளில் ஆட்டம்

கடந்த 2008ல் விராட் கோலியை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது. அதுமுதல் அந்த அணிக்காக அவர் ஆடிவருகிறார். இதுவரை 200 போட்டிகளில் அந்த ஒரே அணிக்காக விராட் கோலி விளையாடி சாதனை புரிந்துள்ளார். ஆர்சிபிக்காக இதுவரை 185 ஐபிஎல் போட்டிகளிலும் 15 சாம்பியன் லீக் போட்டிகளிலும் விராட் ஆடியுள்ளார்.

கனவிலும் நினைக்கவில்லை

கனவிலும் நினைக்கவில்லை

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய 200வது போட்டியில் டாசின் போது பேசிய விராட் கோலி, 2008ல் தான் அந்த அணியில் இணைந்தபோது 200 போட்டிகளில் விளையாடுவேன் என்று நினைத்துகூட பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி குறித்து விராட் நெகிழ்ச்சி

ஆர்சிபி குறித்து விராட் நெகிழ்ச்சி

தொடர்ந்து பேசிய அவர், அந்த அணி தனக்கு எல்லாமுமாக இத்தனை ஆண்டுகளில் இருந்து வருவதாகவும், அதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். இந்த சாதனை நம்ப முடியாததாக உள்ளதாகவும் பெருமை அளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இதன்மூலம் ஒரே அணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமை விராட்டிற்கு கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு நிறைவேறுமா?

இந்த ஆண்டு நிறைவேறுமா?

ஆர்சிபி அணியின் கேப்டனாக திகழ்ந்துவரும் விராட் கோலி, அந்த அணியை பல்வேறு சாதனைகளுக்கு உட்படுத்தினாலும் இதுவரை அந்த அணி ஐபிஎல்லில் ஒருமுறைகூட கோப்பையை வெல்லவில்லை என்ற குறை காணப்படுகிறது. இந்த சீசனில் இதுவரை ஆர்சிபி சிறப்பாக ஆடிவருகிறது. இந்த முறை கோப்பை கனவு அந்த அணிக்கு பூர்த்தியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Kohli said "RCB means a lot" to him, "not many understand that emotion"
Story first published: Friday, October 16, 2020, 8:34 [IST]
Other articles published on Oct 16, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X