பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர், அதை தொடர்ந்த டி20 தொடரையடுத்து அகதாபாத்தில் உள்ளார் கேப்டன் விராட் கோலி.

இந்நிலையில் மகளிர் தினத்தையொட்டி தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வமிகாவிற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

4 ஊர்களில் 14 போட்டிகள்... மும்பை அணியின் ஐபிஎல் போட்டி அட்டவணை இதோ

இன்னொரு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் ஏன் பெண்களுக்கு கொடுத்தார் என்பது குறித்து சமீபத்தில் தான் அறிந்ததாகவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

டி20 தொடர்

டி20 தொடர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது. அடுத்ததாக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இரு அணிகளும் மோதவுள்ளன. டி20 தொடரும் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்திலேயே நடைபெறவுள்ளதையொட்டி விராட் கோலி அங்கேயே பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

விராட் கோலி வாழ்த்து

விராட் கோலி வாழ்த்து

இந்நிலையில் இன்று மகளிர் தினத்தையொட்டி அவர் தனது வாழ்வில் அங்கமாக உள்ள இரு பெண்களுக்கு தனது வாழ்த்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தின்மூலம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், பிரசவத்தை நேரில் பார்க்கும் அனுபவத்தை தான் பெற்றதாக அவர் பெருமை தெரிவித்துள்ளார்.

உயிரை சுமக்கும் வாய்ப்பு

உயிரை சுமக்கும் வாய்ப்பு

இதையடுத்து பெண்களின் வலிமை மற்றும் புனிதம் குறித்து தான் அறிந்ததாகவும் ஒரு உயிரை சுமக்கும் வாய்ப்பை பெண்களுக்கு ஏன் கடவுள் கொடுத்தார் என்பதை உணர்ந்ததாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆண்களைவிட பெண்கள் வலிமையானவர்கள் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விராட் கோலி வாழ்த்து

விராட் கோலி வாழ்த்து

தன்னுடைய வாழ்க்கையில் தன்னுடன் உள்ள வலிமையான பெண்ணுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் தன்னுடைய அம்மாவை போலவே வளரவுள்ள தன்னுடைய மகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களையும் விராட் கோலி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Happy Women's Day to the most fiercely, compassionate and strong woman of my life -Virat kohli
Story first published: Monday, March 8, 2021, 15:53 [IST]
Other articles published on Mar 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X