For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாட் எ பவர்... 33 பந்துகளில் 73 ரன்கள்... சர்ப்ரைஸ் காட்டிய விராட் கோலி

அபுதாபி: கேகேஆர் அணியை எதிர்த்து நேற்றைய போட்டியில் அபுதாபியில் மோதிய ஆர்சிபி அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் ஏபி டீ வில்லியர்ஸ். 33 பந்துகளில் அவுட் ஆகாமல் அவர் அடித்த 73 ரன்கள் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது.

இந்நிலையில் வில்லியர்ஸ் ஒரு சூப்பர் மேன் என்று அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இருக்கிறவர்களை என்ன செய்வது? டிரான்ஸ்பருக்கு எதிராக குதித்த தோனி.. விடாப்பிடியாக துரத்தும் சிஎஸ்கே!இருக்கிறவர்களை என்ன செய்வது? டிரான்ஸ்பருக்கு எதிராக குதித்த தோனி.. விடாப்பிடியாக துரத்தும் சிஎஸ்கே!

82 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி

82 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி

ஐபிஎல்லின் 28வது போட்டி அபுதாபியில் நேற்று கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையில் நடைபெற்ற நிலையில், அதில் ஆர்சிபி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் ஷார்ஜாவின் மைதானம் ரன்கள் அடிப்பதற்கு கடினமானதாக கருதப்படும் நிலையில் வில்லியர்ஸ் பட்டையை கிளப்பியுள்ளார்.

வில்லியர்சின் 73 ரன்கள்

வில்லியர்சின் 73 ரன்கள்

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆர்சிபி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களை குவித்தது. இதற்கு முக்கிய காரணம் ஏபி டீ வில்லியர்ஸ். அவர் 33 பந்துகளில் அவுட் ஆகாமல் 73 ரன்களை குவித்தார். விராட் கோலியால் 28 பந்துகளுக்கு 33 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

விராட் புகழ்ச்சி

விராட் புகழ்ச்சி

இந்நிலையில் ஏபி டீ வில்லியர்ஸ் ஒரு சூப்பர் மேன் என்று விராட் கோலி புகழ்ந்துள்ளார். வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஷார்ஜா போன்ற ஒரு மைதானத்தில் வில்லியர்சால் மட்டுமே இத்தகைய ரன் குவிப்பை செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வீரர்களின் தனிப்பட்ட முயற்சி

வீரர்களின் தனிப்பட்ட முயற்சி

ஆட்டத்தின் போக்கில் 165 -170 ரன்களை மட்டுமே அடிக்க முடியும் என்று தான் கருதியதாகவும் ஆனால் ஏபி டீ வில்லியர்சால் 194 ரன்கள் வரை அணியின் ஸ்கோர் உயர்ந்ததாகவும் விராட் தெரிவித்துள்ளார். மேலும் அணியின் ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் அணியின் வெற்றிக்காக பாடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, October 14, 2020, 13:57 [IST]
Other articles published on Oct 14, 2020
English summary
Great to see individuals step up when the team requires -Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X