For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு சதம்... மற்றவர்களை பேச வைத்தார்... பேசியவர்களை வாயடைக்க வைத்தார்... கிங் கோஹ்லி விஸ்வரூபம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபார சதம் அடித்தார் விராட் கோஹ்லி. இதன் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பிர்மிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தனியாளாக விளையாடி சதமடித்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி. இதன் மூலம் விமர்சனம் செய்தவர்களை வாயடைக்க வைத்தார். தான் ஒரு ரன் மெஷின் என்பதை நிரூபித்து பலருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 287 ரன்கள் எடுத்தது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த ஆட்டத்தில் கேப்டன் விராட் கோஹ்லி பொறுமையாகவும் பொறுப்புடனும் விளையாடி 149 ரன்கள் எடுத்தார். இது டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லியின் 22வது சதமாகும்.

2014ல் இங்கிலாந்துக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, 5 டெஸ்ட்களில் 10 இன்னிங்ஸில் விளையாடிய கோஹ்லி, 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக 39 ரன்களே எடுத்திருந்தார்.

கோஹ்லி குறித்து விமர்சனம்

கோஹ்லி குறித்து விமர்சனம்

இங்கிலாந்து தொடர் துவங்கும்போது, இந்திய அணி குறித்தும், குறிப்பாக கோஹ்லி குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்தன. 2007க்குப் பிறகு இங்கிலாந்தில் இந்தியா வென்றதில்லை. இந்த முறையும் இந்தியா தோல்வியே அடையும், கோஹ்லியின் பேட்டிங் எடுபடாது என்று பல விமர்சனங்கள் எழுந்தன.

பதிலடி கொடுத்தார்

பதிலடி கொடுத்தார்

இந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து மண்ணில் முதல் சதத்தை அடித்து விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார் கோஹ்லி. மனைவி அனுஷ்கா சர்மா அளித்த திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை, கழுத்தில் உள்ள செயினில் மாட்டியுள்ளார் கோஹ்லி. சதமடித்ததும், அதை முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சாதனைகள் தகர்ப்பு

சாதனைகள் தகர்ப்பு

இந்த ஆட்டத்தின்போது, பல சாதனைகளை, மைல்கல்களை கோஹ்லி எட்டியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்கள் குவித்த 13வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் அரை சதங்களை சதமாக மாற்றுவதில் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் உள்ளார் கோஹ்லி

பேசவைத்த சதம்

பேசவைத்த சதம்

2014 சுற்றுப் பயணத்தில் 5 டெஸ்ட்களில், 10 இன்னிங்ஸ்களில் எடுத்ததைவிட, இந்தத் தொடரின் முதல் இன்னிங்ஸிலேயே அதிக ரன்களை எடுத்துள்ளார் கோஹ்லி. இங்கிலாந்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன், டெஸ்ட் போட்டிகளில் 15க்கும் மேற்பட்ட சதம் அடித்த கேப்டன் என பல மைல்கல்களை எட்டி, பலருடைய பாராட்டையும் பெற்று வருகிறார் கோஹ்லி.

Story first published: Friday, August 3, 2018, 10:54 [IST]
Other articles published on Aug 3, 2018
English summary
Virat kohli responded to the comments with century.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X