For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நேற்று குற்றச்சாட்டு.. இன்று ஒற்றுமையா?.. விராட் கோலியின் நிலையற்ற கருத்து.. குழம்பும் ரசிகர்கள்!

சவுத்தாம்டன்: நேற்று சில வீரர்களை விராட் கோலி குறை கூறிய நிலையில் இன்று அப்படியே பல்டி அடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

பொதுவெளியில் கோலி கூறிய ஒற்றை புகார்.. ஆடிப்போய் அதிரடி நடவடிக்கை எடுக்கும் பிசிசிஐ.. கேப்டனின் பவர்பொதுவெளியில் கோலி கூறிய ஒற்றை புகார்.. ஆடிப்போய் அதிரடி நடவடிக்கை எடுக்கும் பிசிசிஐ.. கேப்டனின் பவர்

கோலியின் விளக்கம்

கோலியின் விளக்கம்

தோல்வி குறித்து பேசியிருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி சில வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தான் இந்தியா தோற்றது என கடும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். தோல்விக்கான காரணம் என்பது குறித்து ஆலோசனை செய்வோம். நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக டெஸ்ட் அணியில் தேவையான மாற்றத்தை கொண்டு வருவோம். எந்தவித அச்சமும் இன்றி சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை மட்டும் அணியில் சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் பந்துவீச்சாளர்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்க முடியாது எனத்தெரிவித்திருந்தார்.

மறைமுக குற்றச்சாட்டு

மறைமுக குற்றச்சாட்டு

இந்த விளக்கத்தை வைத்து பார்க்கையில் விராட் கோலி மறைமுகமாக சட்டீஸ்வர் புஜாரா மற்றும் ரோகித் சர்மாவை குறை கூறுகிறார் என தெரிகிறது. முதல் இன்னிங்ஸில் புஜாரா 54 பந்துகளை சந்தித்து 8 ரன்களை மட்டுமே எடுத்தார். அவர் தனது முதல் ரன்னை அடிக்க 35 பந்துகளை எடுத்துக்கொண்டார். அதே போல 2வது இன்னிங்ஸில் 80 பந்துகளை சந்தித்த அவர் 15 ரன்களை மட்டுமே அடித்து ஏமாற்றினார். இதே போல ஓப்பனராக களமிறங்கிய ரோகித் சர்மா நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க திணறியது, பின்னர் வந்த வீரர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 கோலியின் ட்வீட்

கோலியின் ட்வீட்

இந்நிலையில் இத்தனை விமர்சனங்களை கூறிவிட்டு தற்போது விராட் கோலி எதுவுமே நடக்காதது போல ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். இந்திய அணி வீரர்களின் புகைப்படத்தை பதிவுட்டுள்ள அவர், இது வெறும் அணி அல்ல, ஒரு குடுமத்தை போன்றது. நாங்கள் ஒன்றாக இணைந்து வரும் நாட்களில் பயணிப்போம் எனக்கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

 இங்கிலாந்து டெஸ்ட்

இங்கிலாந்து டெஸ்ட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அடுத்ததாக இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த போட்டி ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரில் புஜாரா மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

Story first published: Friday, June 25, 2021, 18:12 [IST]
Other articles published on Jun 25, 2021
English summary
Indian Skipper Virat Kohli put a tweet after India’s defeat in the WTC final against New Zealand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X