For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

100வது டெஸ்டிற்காக பிசிசிஐ கொடுத்த பெரும் கவுரவம்..அதிரடியாக புறக்கணித்த விராட் கோலி - காரணம் என்ன?

மும்பை: விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியையொட்டி பிசிசிஐ கொடுத்த பெரும் கவுரத்தை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

இந்தியாவின் டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி திடீரென விலகி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் புதிய ரெக்கார்ட் ரெடி!! இளம் வீரரை வாங்க பல கோடிகளை இறக்கும் 3 அணிகள் - காரணம்? ஐபிஎல் வரலாற்றில் புதிய ரெக்கார்ட் ரெடி!! இளம் வீரரை வாங்க பல கோடிகளை இறக்கும் 3 அணிகள் - காரணம்?

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவ்வப்போது சொதப்பினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்துள்ளார். இவர் ஏன் பதவி விலகினார் என ரசிகர்கள் கொந்தளித்தனர்.

 பதவி விலகல்

பதவி விலகல்

விராட் கோலியின் கேப்டன்சியில் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வந்த நிலையில் தென்னாப்பிரிக்க தொடரில் அது மேலும் கூடியது. 3வது நடுவரிடம் ஸ்டம்ப் மைக்கில் கத்தியது, வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்து ஏமாற்றியது என விமர்சனங்கள் அடுக்கப்பட்டன. இதனால் தனது டெஸ்ட் கேப்டன்சியையும் விட்டு விலகி, முழு நேர பேட்ஸ்மேனாக கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

 பிசிசிஐ ஆஃபர்

பிசிசிஐ ஆஃபர்

இந்நிலையில் அவரின் கேப்டன்சியை பாராட்டி பிசிசிஐ கொடுத்த கவுரவத்தை வேண்டாம் என மறுத்துள்ளார். இந்திய அணி அடுத்ததாக இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதுகிறது. இதன் முதல் போட்டி வரும் பிப்ரவரி 25ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இப்போட்டி தான் விராட் கோலி விளையாடப்போகும் 100வது டெஸ்ட் ஆகும். எனவே இந்த போட்டியை ஃபேரவெல் போட்டியாக கருதி விராட் கோலி கேப்டன்சி செய்ய வேண்டும் என பிசிசிஐ கோரியுள்ளது.

 கோலி மறுப்பு

கோலி மறுப்பு

ஆனால் விராட் கோலி அதற்கு மறுத்துள்ளார். அவருக்கு பெங்களூரு மிகவும் நெருக்கமான மைதானம் என்பதால் இந்த திட்டத்தை பிசிசிஐ கூறியது. அதற்கு பதிலளித்த கோலி " ஒரே ஒரு போட்டி எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது.. இந்த மனநிலையுடையவன் நான்" எனக்கூறி கேப்டன்சி செய்ய மறுத்துவிட்டார். இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

 என்ன காரணம்

என்ன காரணம்

அடுத்ததாக வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் முதல் விராட் கோலி வேறு ஒரு கேப்டனுக்கு கீழ் விளையாடவுள்ளார். இதில் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். இலங்கை தொடர் முதல் ரோகித் சர்மா மூன்று வடிவ அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர்களிடம் முழு பொறுப்பையும் ஒப்படைக்கவே புதிய தொடரில் கேப்டன்சி வேண்டாம் என கோலி கூறியதாக தெரிகிறது.

Story first published: Monday, January 17, 2022, 16:47 [IST]
Other articles published on Jan 17, 2022
English summary
BCCI offered Virat kohli that he can play his 100th test as indian team captain, but kohli rejected the offer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X