காதல் ரோஜாவே.. "ஒன் அன்ட் ஒன்லி" அனுஷ்காவுடன்.. கோலியின் ரொமான்டிக் போட்டோ

மும்பை: தனது காதல் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி. கொரோனா லாக்டவுன் காரணமாக விராட் கோலி, மனைவி அனுஷ்காவுடன் வீட்டோடு முடங்கியுள்ளார். அவ்வப்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் ஏதாவது வீடியோ, புகைப்படம் போன்றவற்றைப் போட்டபடி இருக்கிறார்.

ICC Women's T20 World Cup 2020 புது சாதனை | Australia Vs India

அந்த வகையில் தற்போது ஒரு துரோபேக் படம் ஒன்றைப் போட்டுள்ளார் கோலி. பார்க்கவே அப்படி அழகாக இருக்கிறது. ஏகாந்த வெளியில்.. மனைவி அனுஷ்காவுடன் இயற்கைக் காட்சியை அற்புதமாக ரசித்துக் கொண்டிருக்கிறார் கோலி.

கொரோனா வருவதற்கு முன்பு உலகம் இப்படித்தான் இருந்தது என்றும் கூறியுள்ளார் கோலி. அவர் விட்ட பெருமூச்சில் அத்தனை பேருமே பழைய நினைவுகளில் மூழ்கிப் போயிருப்பார்கள் நிச்சயமாக.

சச்சின்னா சும்மா இல்லீங்க... கொரோனாவுக்கும் கைகொடுப்பார்... பார்பருக்கும் கைகொடுப்பார்

அழகான புகைப்படம்

அழகான புகைப்படம்

மும்பையில் உள்ள வீட்டில் தனது மனைவி, குடும்பத்துடன் பொழுதைக் கழித்து வருகிறார் கோலி. தனது இன்ஸ்டாவில் அவர் போட்டுள்ள படம் முன்பு எடுத்ததாகும். அழகான இயற்கை எழில் சூழ்ந்த அந்த இடத்தில் அமைதியாக அமர்ந்து ரசித்துக் கொண்டுள்ளனர் கோலியும், அனுஷ்காவும். அந்தப் போட்டோவுடன், இதுபோன்ற அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு நம்மால் முன்பு போக முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

அனுஷ்காவுடன் ஜோடியாக

அனுஷ்காவுடன் ஜோடியாக

இணைந்து அமர முடிந்தது. எல்லாவற்றையும் மறந்து மகிழ முடிந்தது. எனது ஒன் அன்ட் ஒன்லியுடன் நான்.. என்று தனது மனைவியுடன் ரசித்த அந்த அருமையான பொழுதை நினைவு கூர்ந்துள்ளார் விராட் கோலி. இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் கமெண்ட்டுகளைக் குவித்துக் கொண்டுள்ளனர்.

அதிக பாதிப்பு

அதிக பாதிப்பு

இந்தியாவிலேயே அதிக அளவிலான கொரோனா பாதிப்பு மும்பையில்தான். படு வேகமாக அங்கு கொரோனா பரவிக் கொண்டுள்ளது. அதேபோல கோலியின் சொந்த ஊரான டெல்லியிலும் அதிக அளவிலான பாதிப்பு உள்ளது. இந்தியாவிலேயே 2வது அதிக பாதிப்பு டெல்லியில்தான். இந்த நிலையில்தான் இப்படி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் கோலி.

விரக்தியுடன் பொழுது போகிறது

விரக்தியுடன் பொழுது போகிறது

கோலியும் மற்ற வீரர்களும் தற்போது சோசியல் மீடியாவில்தான் அதிகம் பிசியாக உள்ளனர். அடிக்கடி சாட் செய்வது, கருத்துக்களைப் பதிவிடுவது என பொழுது போய்க் கொண்டுஉள்ளது. கண்ணுக்கு எட்டியவரை கிரிக்கெட் போட்டிகள் எதுவும் தொடங்குவதாகத் தெரியவில்லை என்பதால் வீரர்களும் கூட லேசாக விரக்தி அடைய ஆரம்பித்துள்ளனர். எப்படா பேட்டை எடுப்போம் வெளுப்போம்னு புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Indian captain Virat Kohli released a throwback photo with wife Anushka Sharma
Story first published: Tuesday, June 23, 2020, 16:59 [IST]
Other articles published on Jun 23, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more