அப்படி செய்யாதீங்க பிளீஸ்..!! மகளுக்காக விராட் கோலி ரசிகர்களுக்கு விடுத்த கோரிக்கை

கேப் டவுன்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்

சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவை ரசிகர்கள் கேட்பார்களா இல்லையா என்று தெரியவில்லை

தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா, குழந்தை வாமிக்காவுடன் சென்றார்.

கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை..!! ஆனால் நடந்தது என்ன தெரியமா? இங்கிலாந்தை அலற விட்ட மே.இ.தீவுகள் அணி..கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை..!! ஆனால் நடந்தது என்ன தெரியமா? இங்கிலாந்தை அலற விட்ட மே.இ.தீவுகள் அணி..

வாமிகா கோலி

வாமிகா கோலி

விராட் கோலிக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை பிறந்தது. இதற்காக ஆஸ்திரேலிய தொடரை பாதியில் விட்டு வந்தார். இந்த நிலையில், தனது குழந்தையின் புகைப்படத்தை முகம் தெரியாத வகையில் விராட் கோலி வெளியிட்டார். அவருக்கு வாமிக்கா என்றும் பெயர் சூட்டினார். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி இதுவரை தனது குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியது இல்லை.

மைதானத்தில் வாமிகா

மைதானத்தில் வாமிகா

இந்த நிலையில், கேப் டவுனில் நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் கோலி அரைசதம் அடித்து, இதனை தனது மகளுக்கு சமர்பிப்பதாக சைகையில் காட்டினார். அப்போது கோலியின் மனைவி அனுஷ்காவும், அவரது மகள் வாமிக்காவும் கேலரியில் நினறு கைத்தட்டி விராட் கோலியை உற்சாகப்படுத்தினர்

டிரெண்டிங்கில் கோலி

டிரெண்டிங்கில் கோலி

இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டது. விராட் கோலியின் மகளை முதல் முறையாக பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், விராட் கோலி ரசிகர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்

கோலி கோரிக்கை

கோலி கோரிக்கை

அதில் ,நேற்று மைதானத்திற்கு வந்த எனது மகளின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. எதிர்பாராத நேரத்தில் என் மகளை வீடியோ எடுத்து விட்டார்கள். எனது தனிப்பட்ட காரணங்களால் இதனை நாங்கள் விரும்பவில்லை. ரசிகர்கள் வாமிக்காவின் புகைப்படத்தை பகிர வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். எங்களை புரிந்து கொண்டதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். விராட் கோலியின் இந்த கோரிக்கை ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது,

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat kohli request to his fans not to share image of his daughter vamika kohliஅப்படி செய்யாதீங்க பிளீஸ்..!! மகளுக்காக விராட் கோலி ரசிகர்களுக்கு விடுத்த கோரிக்கை
Story first published: Monday, January 24, 2022, 14:58 [IST]
Other articles published on Jan 24, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X