For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்பப்பா… ! இதுதான்… என் வாழ்க்கையில மறக்க முடியாத போட்டி.. அலறும் கோலி

மும்பை: 2010ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி சார்பில் நான் விளையாடிய போட்டியை என் வாழ்நாளில் மறக்க முடியாத போட்டி என்று விராட் கோலி நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளார்.

ஐபிஎல் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, நடப்பு சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது.

இந் நிலையில், பெங்களூரு அணி சார்பில் தனக்கு மிகவும் பிடித்த போட்டி குறித்து கோலி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 2010ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் டி 20 போட்டி இன்னும் நினைவிருக்கிறது.

என் அருமை சென்னை ஐபிஎல் ரசிகர்களே... தங்க தமிழ்தேசத்திற்கு வந்து விட்டேன்.. இது அவரோட டுவீட் என் அருமை சென்னை ஐபிஎல் ரசிகர்களே... தங்க தமிழ்தேசத்திற்கு வந்து விட்டேன்.. இது அவரோட டுவீட்

கோலி 47 ரன்கள்

கோலி 47 ரன்கள்

அந்த போட்டியில் நான் அடித்த ரன்கள் 47 தான்.ஆனால் கடுமையாக போராடி அந்த போட்டியில் கடைசி பந்தில் தோல்வியை தழுவினோம். பெங்களூரு அணிக்கு நான் ஆடியதில் அதுதான் மறக்க முடியாத போட்டி.

தோல்வியடைந்தோம்

தோல்வியடைந்தோம்

அந்த போட்டியில் சிறப்பாக ஆடியும், வெற்றியின் அருகில் சென்று தோல்வியை சந்தித்தோம். கடைசி ஓவரை வீசிய ஜாகீர் கான் உட்பட மும்பை அணியில் இருந்த டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் என பலரும் எனது ஆட்டத்தை பார்த்து பாராட்டினர். என் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத, முக்கியமான தருணம் என கோலி தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கு 166 ரன்கள்

வெற்றிக்கு 166 ரன்கள்

2010ம் ஆண்டு நடந்த அந்த போட்டியில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூரு அணியும் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 165 ரன்களை குவித்தது.

விக்கெட்டுகள் வீழ்ந்தன

விக்கெட்டுகள் வீழ்ந்தன

166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தன. மறுமுனையில் ராகுல் டிராவிட் அபாரமாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.

கடைசி பந்தில் அவுட்

கடைசி பந்தில் அவுட்

அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிரடியாக ஆடியது அப்போதைய இளம் வீரர் விராட் கோலி. டிராவிட் 71 ரன்கள் அடித்தார். 24 பந்துகளில் 47 ரன்களை குவித்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் கோலி அவுட்டானார்.

த்ரில்லான வெற்றி

த்ரில்லான வெற்றி

கடைசி பந்தில் அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த பந்தில் தான் கோலி ஆட்டமிழந்தார். இதையடுத்து கடைசி பந்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அந்த போட்டியை தான் தற்போது கோலி குறிப்பிடுகிறார்.

Story first published: Saturday, March 16, 2019, 19:42 [IST]
Other articles published on Mar 16, 2019
English summary
Virat Kohli reveals his best match for Royal Challengers Bangalore.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X