காதலுக்கு மொழி தேவையில்லை... மீண்டும் நிரூபித்த விராட் -அனுஷ்கா ஜோடி!

துபாய் : ஆர்சிபி கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா யூஏஇயில் இருந்தபடி அவரை ஊக்குவித்து வருகிறார்.

தற்போது கர்ப்பமாக உள்ள அனுஷ்கா, விராட்டின் அனைத்து போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் கடந்த சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில், மைதானத்தில் இருந்தபடி ஸ்டாண்டில் இருந்த அனுஷ்கா உணவு எடுத்துக் கொண்டாரா என்று சைகை மூலம் விராட் கேட்டதும் அதற்கு அவர் அவ்வாறே பதிலளித்ததும் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டது.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் ஆதர்ச தம்பதிகளாக வலம் வருவதும் அனுஷ்கா தற்போது கர்ப்பமாக உள்ளதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவரும் விராட் கோலியை ஊக்குவிக்கும்வகையில் அனுஷ்கா சர்மா யூஏஇயில் உள்ளார். அவரது அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று ஊக்குவித்தும் வருகிறார்.

இந்நிலையில் கடந்த சிஎஸ்கேவிற்கு எதிரான ஆர்சிபி போட்டியில் ஸ்டாண்டில் இருந்த அனுஷ்கா சர்மா, உணவு சாப்பிட்டாரா என்று மைதானத்தில் இருந்தபடி விராட் கோலி சைகை மூலம் கேள்வி கேட்டார். அதற்கு அனுஷ்கா சர்மாவும் பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Virat Kohli made an adorable gesture from the ground to his wife Anushka
Story first published: Thursday, October 29, 2020, 11:10 [IST]
Other articles published on Oct 29, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X