For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கலங்கிய இளம் வீரர்... ஆறுதல் அளித்த கேப்டன்... வலிமையை கொடுத்த அறிவுரை!

சிட்னி : தன்னுடைய தந்தையின் மரணத்தால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார் இளம்வீரர் முகமது சிராஜ்.

தனக்கு எல்லாமுமாக இருந்த தன்னுடைய தந்தையின் இழப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாக முகமது சிராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தந்தையின் மரண செய்தியால் தான் உடைந்திருந்தபோது விராட் கோலி அளித்த ஆலோசனை எவ்வாறு தனக்கு ஆறுதலை அளித்தது என்பது குறித்து சிராஜ் மனம் திறந்துள்ளார்.

சிராஜ் தந்தை மறைவு

சிராஜ் தந்தை மறைவு

ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடி கவனத்தை பெற்ற ஆர்சிபி வீரர் முகமது சிராஜ், தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார். சிட்னியில் குவாரன்டைன் மற்றும் பயிற்சிப் போட்டிகளில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை அவரது தந்தை முகமது கௌஸ் உடல்நலக்குறைவால் காலமானார்.

தாயின் அறிவுரை

தாயின் அறிவுரை

தன்னுடைய தந்தையின் மறைவையொட்டி அவர் நாடு திரும்பவில்லை. மாறாக இந்தியாவிற்காக விளையாட முடிவு செய்து தொடர்ந்து சிட்னியில் உள்ளார். இந்நிலையில், தன்னுடைய தந்தையின் மறைவையொட்டி தான் இந்தியா திரும்புவது குறித்து முடிவு செய்ய முடியாமல் இருந்த நிலையில் தன்னுடைய தாய் கொடுத்த ஆலோசனை தனக்கு தெளிவை கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுளளார்.

நனவாக்க தாய் அறிவுரை

நனவாக்க தாய் அறிவுரை

எல்லோரும் ஒருநாள் மறைந்தாக வேண்டும் என்று குறிப்பிட்ட அவரது தாய், அவரது தந்தையின் கனவை முழுமையாக்க தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலேயே இருந்து சிறப்பாக விளையாட அறிவுறுத்தியதாக சிராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய தந்தை மறைந்தாலும் தன்னுடன் எப்போதும் இருப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தேற்றிய விராட் கோலி

தேற்றிய விராட் கோலி

மேலும் தன்னுடைய தந்தையின் மறைவால் தான் மனம் உடைந்திருந்த போது தன்னிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, டென்ஷன் இல்லாமல் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் சிராஜ் தெரிவித்தார். இந்திய அணிக்காக சிராஜ் விளையாடுவதை அவருடைய தந்தை மிகவும் விரும்பியதாகவும் எந்த மனநெருக்கடியும் இல்லாமல் அதை செய்யுமாறு விராட் கூறியதாகவும் சிராஜ் குறிப்பிட்டார்.

விராட் அறிவுறுத்தல்

விராட் அறிவுறுத்தல்

இந்த நெருக்கடி நேரத்தில் வலிமையாக இருந்தால், அது சிராஜ்க்கு மிகவும் உதவும் என்றும் விராட் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தன்னுடைய இந்த நெருக்கடி சூழலில் தனக்கு ஆதரவாக இருந்த சக வீரர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கெண்டார்.

Story first published: Tuesday, November 24, 2020, 13:48 [IST]
Other articles published on Nov 24, 2020
English summary
If you can be strong in this situation, it will only help you -Virat Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X