For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலிக்கு வருமான பாதிப்பு?.. பதவி விலகிய பின் என்ன மாற்றம்.. முழு ஊதிய விவரம் இதோ!

மும்பை: விராட் கோலி கேப்டன்சி பதவிகளில் இருந்து விலகியதால் அவரின் பிராண்ட் மதிப்பு மற்றும் வருமானங்கள் குறைந்துள்ளதா என்ற விவாதம் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் அனைத்து வடிவ கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி சமீபத்தில் விலகினார்.

இதனையடுத்து விளம்பர நிறுவனங்களுக்கிடையே கோலியின் மதிப்பு சற்று மங்கியுள்ளதாக தெரிகிறது. இது அவரின் வருமானத்தை எப்படி பாதித்துள்ளது என ரசிகர்கள் அதிகம் கேட்டு வருகின்றனர்.

“விராட் கோலி முதலில் ஈகோ மோதலை விடனும்”.. கபில் தேவ் கூறிய முக்கிய அட்வைஸ். ரசிகர்கள் வரவேற்பு! “விராட் கோலி முதலில் ஈகோ மோதலை விடனும்”.. கபில் தேவ் கூறிய முக்கிய அட்வைஸ். ரசிகர்கள் வரவேற்பு!

 கோலியின் மதிப்பு

கோலியின் மதிப்பு

சர்வதேச அளவில் சமூக வலைதளங்களில் அதிக மக்களால் பின் தொடரப்படும் விளையாட்டு வீரர்களில் விராட் கோலியும் முக்கிய இடத்தில் உள்ளார். இவர் விளம்பர தூதராக செயல்பட்டு, நடித்துக் கொடுத்த முன்னணி நிறுவனங்கள் பெரும் லாபத்தை சந்தித்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஆட்டத்தின் போது இவரின் ஆக்ரோஷமே இவருக்கான பிராண்ட் மதிப்பாக இருந்து வருவதால், இவருக்கான மதிப்பு ஏகபோகத்திற்கு இருந்தது.

கோலியின் சந்தை மதிப்பு

கோலியின் சந்தை மதிப்பு

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் விராட் கோலியின் சந்தை மதிப்பில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதே உண்மை. ஏற்கனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் படி அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவரின் சந்தை மதிப்பில் எந்தவொரு நிறுவனமும், வருமானத்தை குறைக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பர வருமானங்கள்

விளம்பர வருமானங்கள்

விராட் கோலி கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் 30 பெரும் நிறுவனங்களுக்காக நடித்துக் கொடுத்துள்ளார். இதன் மூலம் ரூ.179 கோடி வரை வருமானம் பெற்றுள்ளார் எனத்தெரிகிறது. அவர் விளம்பரத்தில் நடித்துக் கொடுக்க ஒருநாள் ஊதியமாக ரூ.7 - 8 கோடி பெறுகிறார். 2022ம் ஆண்டிற்காக மேலும் சில நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளதாக தெரிகிறது.

Recommended Video

Virat Kohli-ன் முடிவை மதிக்கிறோம்.. BCCI கொடுத்த விளக்கம்
இன்ஸ்டாகிராம் பதிவுகள்

இன்ஸ்டாகிராம் பதிவுகள்

விராட் கோலிக்கு விளம்பரங்களை தவிர்த்து சமூக வலைதள பதிவுகளுக்கும் கோடி கணக்கில் ஊதியம் கிடைக்கிறது. அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடும் ஒரே ஒரு பதிவுக்கு மட்டும் ரூ.5 கோடி வரை ஊதியமாக வழங்கப்படுகிறது.

ஏனென்றால் அவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 15 கோடி மக்கள் பின் தொடர்கின்றனர். உலகளவில் அதிகம் பின் தொடரப்படும் விளையாட்டு வீரர்களில் 4வது இடத்தில் உள்ளார். இனி வரும் காலங்களிலும் அவரின் பேட்டிங் அதிரடிகளால் ஊதியங்கள் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, January 17, 2022, 13:12 [IST]
Other articles published on Jan 17, 2022
English summary
Virat Kohli's Commercial earnings and net worth after ending his captaincy innings
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X