For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“50 ஓவர் கேப்டன்சியும் இல்லை?”.. கோலிக்கு பயம் காட்டும் பிசிசிஐ.. குஷியில் இருக்கும் சீனியர் வீரர்!

மும்பை: ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி தொடர்ந்து செயல்படுவாரா என்பதை இந்த வாரத்தில் பிசிசிஐ முடிவெடுக்கவுள்ளது.

Recommended Video

Kohli's fate as ODI skipper set to be decided | OneIndia Tamil

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளது.

இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு! இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

வரும் டிசம்பர் 9ம் தேதியன்று தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் மற்றும் 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்

வரும் டிசம்பர் 17ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்த தொடர் நடைபெறுமா என்பதிலேயே சிக்கல் நிலவி வருகிறது. தென்னாப்பிரிக்க நாட்டில் பரவி வரும் ஓமைக்ரான் எனும் புதுவகை வைரஸால் வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே மத்திய அரசின் அனுமதியை பெறுவதற்காக பிசிசிஐ காத்துள்ளது. எனினும் அதற்குள் வீரர்கள் தேர்வை முடித்துவிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கோலிக்கு சிக்கல்

கோலிக்கு சிக்கல்

இந்த வாரத்தில் பிசிசிஐ-ன் உயர்மட்ட தேர்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் வீரர்கள் தேர்வு செய்வதை விட ஒரு முக்கிய குழப்பங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். அதாவது 2022ம் ஆண்டு முழுக்க முழுக்க டி20 போட்டிகளால் நிறைந்திருக்க போகிறது. மொத்தமாக இந்திய அணிக்கு 9 ஒருநாள் போட்டிகள் தான் நடைபெறவிருக்கிறது. இதில் 3 தென்னாப்பிரிக்காவில், 3 இங்கிலாந்தில் மற்றும் 3 போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது.

2 சிந்தனைகள்

2 சிந்தனைகள்

எனவே மிக குறைவான அளவிலான போட்டிகள் தான் இருப்பதால், அதனை முடித்துக்கொடுக்க விராட் கோலியையே கேப்டனாக நீடிக்க வைக்கலாமா? என்ற விவாதம் ஒருபுறம் உள்ளது. மற்றொரு புறம், இந்த குறைவான போட்டிகள் மூலம் ரோகித் சர்மா, ஒருநாள் அணியின் கேப்டனாக தன்னை தயார்படுத்திக்கொள்ள கால அவகாசமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்த முடிவுகள் இந்த வாரத்தில் எடுக்கப்படவுள்ளது.

பிசிசிஐ-ன் தெளிவு

பிசிசிஐ-ன் தெளிவு

எது எப்படியோ, விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்படுவதில் பிசிசிஐ-க்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தனி தனி கேப்டன்கள் இருப்பது அணிக்குள் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால் பிசிசிஐ இதனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 2, 2021, 10:36 [IST]
Other articles published on Dec 2, 2021
English summary
Virat kohli's ODI captaincy set to be decided this week? Selectors are in confusion over 9 matches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X