பாகிஸ்தானின் ஓவர் வாய்ப்பேச்சு.. அசால்டாக பதில் கூறிய விராட் கோலி.. நெத்தியடி என ரசிகர்கள் உற்சாகம்!

அமீரகம்: இந்திய அணியை எளிதாக வீழ்த்தி விடுவோம் என பாகிஸ்தான் தெரிவித்து வரும் நிலையில் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.

ICC T20 World Cup- Virat Kohli Has His Say On Ind Vs Pak Cricket Rivalry | Oneindia Tamil

ஐபிஎல் தொடர் முடிவடைந்துவிட்டதால் இந்திய வீரர்கள் அடுத்ததாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை தொடர் இன்று முதல் நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தகுதிச்சுற்று போட்டிகள் ஓமனிலும், சூப்பர் 12 போட்டிகள் அமீரகத்திலும் நடைபெறவுள்ளது.

அக்டோபர் 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 8 அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று அதில் இருந்து

“இனிமேலும் பொறுக்க முடியாது”..தலைமை பயிற்சியாளர் பதவி.. காலக்கெடு விதித்து நடவடிக்கை எடுத்த பிசிசிஐ “இனிமேலும் பொறுக்க முடியாது”..தலைமை பயிற்சியாளர் பதவி.. காலக்கெடு விதித்து நடவடிக்கை எடுத்த பிசிசிஐ

ஐசிசி திட்டம்

ஐசிசி திட்டம்

இந்த தொடரில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வரும் 24ம் தேதியன்று முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. டி20 உலகக்கோப்பை தொடரை ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புடன் கொண்டு செல்ல இந்த ப்ளானை ஐசிசி போட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள அரசியல் பிரச்னைகள் காரணமாக ஐசிசி தொடர்களில் மட்டும் தான் இரு அணிகளும் மோதிக்கொள்கின்றன.

பாகிஸ்தானின் பேச்சு

பாகிஸ்தானின் பேச்சு

நீண்ட வருடங்களுக்கு பிறகு மோதுவதால் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த போட்டி குறித்து கடந்த சில தினங்களாக பேசி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்கள் ஆகியோர் இந்திய அணியை எளிதாக வீழ்த்திவிடுவோம், இந்த முறை இந்தியாவை வெல்வது சுலபம் தான் எனத்தெரிவித்து வருகின்றனர்.

விராட் கோலி பதிலடி

விராட் கோலி பதிலடி

இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களின் இந்த பேச்சுகளுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், என்னைப் பொறுத்தவரை இது எனக்கு மற்ற போட்டிகளை போன்றுதான். இந்த போட்டி மீது மற்றவர்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பது எனக்கு தெரியும். உண்மையை கூறவேண்டும் என்றால் எனக்கு எதிர்பார்ப்புகளே இல்லை.

வழக்கமான போட்டி

வழக்கமான போட்டி

இந்த போட்டிக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரமமாக இருக்கும். டிக்கெட் விளைகளும் மிக அதிகமாக இருக்கும். எனது நண்பர்கள் சிலரும் என்னிடம் டிக்கெட்கள் உள்ளதா? முன் வரிசையில் டிக்கெட் கிடைக்குமா என கேட்பார்கள். நான் இல்லை எனக்கூறும் சூழல் தான் இருக்கும். அவ்வளவுதான் இந்த போட்டியின் நிலைமை. மற்றபடி வேறு ஒன்றும் ஸ்பெஷல் இல்லை. எங்களை பொறுத்தவரை இந்த போட்டியை வழக்கமான போட்டிகளை போன்றே எதிர்கொள்வோம் எனத்தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
virat kohli's point of view on India - pakistan match in t20 worldcup
Story first published: Sunday, October 17, 2021, 18:20 [IST]
Other articles published on Oct 17, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X