For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவங்க என்ன சொல்றாங்களோ.. அதை கேட்டு நடப்போம்.. கேப்டன் கோலியின் முடிவு இது தான்!

விசாகப்பட்டினம் : இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி நடக்குமா என்பது குறித்த கேள்விக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.

காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதை கண்டித்து இந்தியா இனி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடக் கூடாது என பலரும் கூறி வருகின்றனர்.

கோலி பதில்

கோலி பதில்

இதனால், இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கோலி, பிசிசிஐ மற்றும் இந்திய அரசு எடுக்கும் முடிவின் படி அணி செயல்படும் என கூறியுள்ளார்.

இரங்கல்

இரங்கல்

கோலி, "புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்திய அணி மற்றும் நிர்வாகம் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளோம்." என கூறினார்.

என்ன முடிவு?

என்ன முடிவு?

"எங்கள் முடிவு மிகவும் எளிதானது. இந்த நாடு என்ன விரும்புகிறதோ, பிசிசிஐ என்ன முடிவு எடுக்கிறதோ அதன் படி நடப்போம். அது தான் எங்கள் அடிப்படை கருத்து. நாங்கள் அரசு மற்றும் போர்டு எடுக்கும் முடிவின் வழியில் செல்வோம். அதை மதிக்கிறோம். இந்த குறிப்பிட்ட விவகாரத்தில் அது தான் எங்கள் முடிவு" என கூறினார் கோலி.

பிசிசிஐ கடிதம்

பிசிசிஐ கடிதம்

இதே கருத்தையே பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கூறி இருந்தார். பிசிசிஐ இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை. எனினும், உலகக்கோப்பை தொடர்பாக ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளது பிசிசிஐ.

வீரர்களின் பாதுகாப்பு

வீரர்களின் பாதுகாப்பு

உலகக்கோப்பையில் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தீவிரவாதத்தை வளர்க்கும் நாடுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

முடிவு இல்லை

முடிவு இல்லை

எனினும், உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுமா என்பது குறித்து பிசிசிஐ எதுவும் கூறவில்லை. பிசிசிஐ அளவில், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, மூத்த வீரர் தோனி ஆகியோரின் கருத்துக்களைக் கேட்டுப் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Saturday, February 23, 2019, 17:41 [IST]
Other articles published on Feb 23, 2019
English summary
Virat Kohli says the Team stands by BCCI and Government on India vs Pakistan match at World cup 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X