For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லியைப் பார்த்தா ரிச்சர்ட்ஸ் மாதிரியே இருக்கு.. யாருப்பா அது?.. ஓ.. ரவி சாஸ்திரியா!

டெல்லி: விராத் கோஹ்லியைப் பார்த்தால் அப்படியே விவ் ரிச்சர்ட்ஸைப் பார்ப்பது போலவே இருக்கிறது. அவரது கண்ணாடி பிம்பம் மாதிரியே இருக்கிறார் கோஹ்லி என்று இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

மேலும் விராத் கோஹ்லி மிகக் குறுகிய காலத்திற்குள் உச்சத்தை எட்டியுள்ளார் என்றும், அது வியப்புக்குரியது என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். போர் வீரன் கத்தியை சுழற்றுவது போல கோஹ்லி தனது பேட்டைச் சுழற்றி பந்துகளை அடிப்பதாகவும் அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ரவி சாஸ்திரியின் பேட்டியிலிருந்து சில..

பேட்டிங் ஸ்டைல் அப்படியே ரிச்சர்ட்ஸ்

பேட்டிங் ஸ்டைல் அப்படியே ரிச்சர்ட்ஸ்

கோஹ்லியின் பேட்டிங் சில நேரம் எனக்கு விவ் ரிச்சர்ட்ஸை நினைவூட்டுகிறது. அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தியவர், ஆதிக்கம் செலுத்தியவர் விவ்.

கோஹ்லியும் அப்படித்தான்

கோஹ்லியும் அப்படித்தான்

கோஹ்லியும் அப்படித்தான் இருக்கிறார். கோஹ்லியைப் பார்த்தால் விவ்-வைப் பார்ப்பது போலவே இருக்கிறது. அதே மாதிரியான கிரிக்கெட் ஆடுகிறார் கோஹ்லி.

இவங்க மூனு பேரும் சேர்ந்தால்

இவங்க மூனு பேரும் சேர்ந்தால்

தற்போதைய இந்திய அணியில் விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் சேரும்போது அது உலகின் மிகச் சிறந்த மூவர் அணியாக திகழ்கிறது.

அபாயகரமான டாப் ஆர்டர்

அபாயகரமான டாப் ஆர்டர்

இந்த மூன்று பேரும் அபாயகரமான டாப் ஆர்டர் என்று தாராளமாக சொல்லலாம். தவான் ஆட ஆரம்பித்து விட்டால் தடுத்து நிறுத்துவது கடினம். ஆக்ரோஷமான வீரர் அவர்.

கிளாஸ் வீரர் ரோஹித்

கிளாஸ் வீரர் ரோஹித்

கிளாஸ் ஆன வீரர் ரோஹித் சர்மா. பிரில்லியன்ட் வீரர். அதிரடி, போராடும் குணம் என எல்லாம் கலந்த கலவை அவர். கோஹ்லியோ கிடைக்கும் பந்தையெல்லாம் பீஸ் பீஸ் ஆக்கக் கூடியவர்.

சும்மா கத்தி போல

சும்மா கத்தி போல

போர்வீரனின் கையில் உள்ள கத்தியைப் போல தெரிகிறது கோஹ்லியின் கையில் உள்ள பேட். அப்படி போர் வீரனைப் போல பேட்டைச் சுழற்றுகிறார்.

அப்பைக்கு இப்ப பரவாயில்லை

அப்பைக்கு இப்ப பரவாயில்லை

இங்கிலாந்து தொடரின்போது கோஹ்லியிடம் சில தவறுகள் இருந்தன. அதையெல்லாம் அவர் சரி செய்து விட்டார். அவை இப்போது நல்ல பலனைத் தரத் தொடங்கியுள்ளன.

டோணின்னா மரியாதை

டோணின்னா மரியாதை

மூத்தவர்கள் குறித்து எப்போதுமே நான் சொல்ல விரும்புவது மரியாதை செலுத்துங்கள். டோணி குறித்து கேட்டாலும் அதையேதான் நான் சொல்லுவேன். அவர் மேதை. அவரது பெயருக்கு அர்த்தம் மரியாதை. அவரது பங்கு மிகச் சிறந்தது. அவரது சாதனையை விட இந்திய கிரிக்கெட்டுக்கு வேறு எதுவும் பெரிதில்லை என்று கூறியுள்ளார் சாஸ்திரி.

Story first published: Thursday, February 4, 2016, 17:18 [IST]
Other articles published on Feb 4, 2016
English summary
In awe of Virat Kohli's meteoric rise, Indian Team Director Ravi Shastri today said the swashbuckling batsman seems like a mirror-image of West Indian great Viv Richards and "wields his willow like a fencer does to his sword."
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X