விராட் கோலி படைத்த பிரமாண்ட சாதனை.. இதுவரை எந்த இந்தியருமே தொட்டது கூட இல்லை.. ரசிகர்கள் உற்சாகம்!

கவுகாத்தி: டி20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

Recommended Video

IND vs SA: Kohli அடித்த 11000 Runs! T20 Cricket-ல் செம Record

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 237/3 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 221 /3 ரன்களை மட்டுமே எடுத்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

விராட் கோலி செய்த பெரும் தியாகம்.. இல்லையெனில் இந்திய அணி தோற்றிருக்கும்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி! விராட் கோலி செய்த பெரும் தியாகம்.. இல்லையெனில் இந்திய அணி தோற்றிருக்கும்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி, இந்த போட்டியிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த அவர், 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 49 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் அரைசதத்தை பூர்த்தி செய்ய வாய்ப்பு இருந்தும், அணிக்காக அதனை தியாகம் செய்தார்.

 விராட் கோலி சாதனை

விராட் கோலி சாதனை

இந்நிலையில் நேற்றைய போட்டியின் மூலம் விராட் கோலி பிரமாண்ட சாதனையை படைத்துள்ளார். அதாவது டி20 கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்தார். (இது அனைத்துவிதமான டி20 கிரிக்கெட்டிலும் ஆகும்). இதுவரை 354 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 11,030 ரன்களை குவித்தார்.

 சர்வதேச ரெக்கார்ட்கள்

சர்வதேச ரெக்கார்ட்கள்

சர்வதேச அளவில் இந்த சாதனையை செய்யும் 3வது வீரர் விராட் கோலி ஆகும். இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கிறிஸ் கெயில், கெயீரன் பொல்லார்ட் மற்றும் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஆகியோர் செய்துள்ளனர்.

கிறிஸ் கெயில் - 463 போட்டிகளில் 14, 562 ரன்கள்

பொல்லார்ட் - 614 போட்டிகளில் 11,915 ரன்கள்

சோயிப் மாலிக் - 481 போட்டிகளில் 11,902 ரன்கள்

விராட் கோலி - 354 போட்டிகளில் 11,030 ரன்கள்

 ரோகித்தும் சாதனை

ரோகித்தும் சாதனை

விராட் கோலியை போலவே ரோகித் சர்மாவும் புதிய மைல்கல்லை எட்டினார். அதாவது நேற்றைய போட்டியின் மூலம் 400 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். அதனை சிறப்பாக்கும் வகையில் 37 பந்துகளில் 43 ரன்களை குவித்துவிட்டு சென்றார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian star batter Virat kohli Sets a New Record in t20 Cricket in India vs south africa 2nd t20 match
Story first published: Monday, October 3, 2022, 10:40 [IST]
Other articles published on Oct 3, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X