“தனிமையில் சிக்கி தவிக்கிறேன்”.. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!

மும்பை: தனிமையால் மிகவும் கடுமையான காலங்களை சந்தித்துள்ளதாக இந்திய வீரர் விராட் கோலி உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

Recommended Video

AsiaCup2022 இந்திய வீரர் Virat Kohli உருக்கமான பேச்சு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

விராட் கோலி கம்பேக்

விராட் கோலி கம்பேக்

இந்திய அணியில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துள்ளது விராட் கோலியின் கம்பேக்கை பார்ப்பதற்காக தான். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்பாமல் ஓய்வுக்கு சென்ற கோலி, நேரடியாக ஆசிய கோப்பையில் வருவேன் எனக்கூறி சென்றார். இதில் ஒருவேளை சொதப்பினால் டி20 உலகக்கோப்பையில் இருந்தே அவர் விலகும் சூழலும் உருவாகும்.

கடினமான சூழல்கள்

கடினமான சூழல்கள்

இந்நிலையில் தனது கடினமான சூழல் குறித்து விராட் கோலி பேசியுள்ளார். ஒரு விளையாட்டு வீரருக்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் வரும்போது மனரீதியாக நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. அந்த சமயங்களில் நாம் பலமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். இனி வரும் வீரர்கள், உடற்தகுதி நன்றாக வைத்துக்கொள்வது மற்றும் மீண்டு வருவதற்கு தொடர் முயற்சிகளை மட்டும் வைத்திருந்தால், சிறந்த விளையாட்டு வீரராக இருப்பார்.

தனிமையை சந்தித்தேன்

தனிமையை சந்தித்தேன்

தனிமையை நான் நன்கு அனுபவித்தவன். ஒரு அறை முழுக்க எனக்காக சிலர் பாசத்துடன் இருந்த போதும், நான் தனியாக இருப்பது போன்று தான் உணர்ந்துள்ளேன். எனவே நமக்காக சற்று நேரத்தை எடுத்துக்கொண்டு தயாராகுங்கள். அப்படி முயற்சி செய்வதை நிறுத்திவிட்டால், பின்னர் பிரச்சினைகளை சரிசெய்வது என்பது கடினமாகிவிடும். கடுமையான சூழல்களை கையாண்டு பழக்கமாக்கி கொள்ளுங்கள் அப்போது உங்கள் பணி சுலபமாகும் என கோலி தெரிவித்துள்ளார்.

 பயிற்சிகள் தொடக்கம்

பயிற்சிகள் தொடக்கம்

ஓய்வில் இருந்து வந்த விராட் கோலி சமீபத்தில் தான் ஆசிய கோப்பை தொடருக்கான பயிற்சியை தொடங்கினார். இன்று அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது. எனவே கோலி, தனக்கு மிகவும் எதிர்க்க பிடித்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat kohli about Asia cup 2022 ( ஆசிய கோப்பை தொடர் குறித்து விராட் கோலி பேச்சு ) ஆசிய கோப்பை தொடர் குறித்து விராட் கோலி உருக்கமான கருத்தை பதிவு செய்துள்ளார்.
Story first published: Wednesday, August 17, 2022, 21:28 [IST]
Other articles published on Aug 17, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X