For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னமா தூக்கறாரு... இந்த மாதிரியெல்லாம் இருக்கறதாலதான் சிறப்பா விளையாட முடியுது

இதுகுறித்து அவ்வப்போது வீடியோ, புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா, டிவிட்டர் பக்கங்களில் வெளியிட்டு வரும் அவர், தற்போது தான் பளுதூக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவ்வப்போது வீடியோ, புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா, டிவிட்டர் பக்கங்களில் வெளியிட்டு வரும் அவர், தற்போது தான் பளுதூக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து அதிசயித்த அவரது ஆர்சிபி அணியின் சக வீரர் ஏபி டீ வில்லியர்ஸ், கமெண்ட்டில் பாராட்டி தள்ளிவிட்டார்.

மகனைச் சுத்திச் சுத்தி வந்து.. முடி வெட்டி அசத்திய சச்சின்.. மகளுக்கும் தேங்க்ஸ்!மகனைச் சுத்திச் சுத்தி வந்து.. முடி வெட்டி அசத்திய சச்சின்.. மகளுக்கும் தேங்க்ஸ்!

பிட்னஸ் பயிற்சியில் மும்முரம்

பிட்னஸ் பயிற்சியில் மும்முரம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டில் முடங்கியிருந்தாலும், தன்னுடைய பிட்னசை பேணுவதில் எந்த முடக்கமும் இல்லாமல் எப்போதும் பரபரப்பாக உள்ளார் விராட் கோலி. இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது தன்னுடைய சமூகவலைதள பதிவுகளில் வெளியிட்டும் வருகிறார். இந்த வீடியோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

வீடியோ வெளியீடு

வீடியோ வெளியீடு

இந்நிலையில், தன்னுடைய வீட்டில் உள்ள ஜிம்மில் பிட்னஸ் பயிற்சியை மேற்கொண்ட விராட் கோலி, பிரம்மாண்டமாக இருக்கும் அந்த பளுவை தூக்கிக் கொண்டே, ஜம்பும் செய்கிறார். இவ்வாறு அவர் 5 முறை செய்கிறார். பார்க்கும் நமக்கு பதைபதைக்கிறது. இதுகுறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் எதையும் எதிர்பார்க்காதீர்கள், பெறுங்கள் என்றும் கேப்ஷன் வெளியிட்டுள்ளார். இதற்கு பல்வேறு கமெண்ட்டுகள், லைக்குகள் குவிந்து வருகின்றன.

எமோஜிகளுடன் பாராட்டு

எமோஜிகளுடன் பாராட்டு

இந்த வீடியோவை பார்த்த ஆர்சிபி அணியின் சக வீரரும் தென்னாப்பிரிக்க அணியின் வீரருமான ஏபி டீ வில்லியர்ஸ், தன்னுடைய பிரமிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தும் முகம், தம்ஸ் அப் மற்றும் பைசெப்ஸ் என எமோஜிகளையும் அவர் தனது கமெண்ட்டில் பதிவு செய்துள்ளார்.

தொடர் பயிற்சிகள்

தொடர் பயிற்சிகள்

விராட் கோலி எப்போதுமே, தன்னுடைய பிட்னசில் மிகுந்த கவனம் கொண்டவர். தனியாக டயட்டையும் பாலோ செய்பவர். கன்னா பின்னாவென்று இவரது டயட் இருக்காது. லாக்டவுன் நேரத்திலும் இவர் தனது பிட்னசை மிகுந்த கவனத்துடன் பராமரித்து வருகிறார். தொடர்ந்து பயிற்சிகளையும் மேற்கொண்டுவரும் விராட், கிரிக்கெட் உடனடியாக துவங்கப்பட்டால்கூட தான் தயாராக இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Story first published: Thursday, May 21, 2020, 1:28 [IST]
Other articles published on May 21, 2020
English summary
Virat Kohli is utilising his time well in lockdown with weight training
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X