ரோகித் சொன்ன ஒற்றை வார்த்தை.. கட்டுப்பட்டு நடந்த விராட் கோலி.. 3வது டி20ல் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

ஐதராபாத்: ரோகித் சர்மா சொன்ன ஒற்றை வார்த்தைக்கு கட்டுப்பட்டு விராட் கோலி செய்த விஷயம் பெறும் வெற்றியை கொடுத்துள்ளது.

Recommended Video

Rohit Sharma, Dinesh Karthik மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் பாராட்டு

ஆஸ்திரேலிய அணியுடனான 3டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2 - 1 என கைப்பற்றி அசத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 186/7 ரன்கள் அடிக்க, இந்திய அணி 19.1 ஓவர்களில் 187/4 ரன்களை அடித்தது.

 “எல்லாம் மாறிடிச்சு.. ஆனால் அது மட்டும்”.. வெற்றி பெற்றும் ரோகித் அதிருப்தி.. என்ன காரணம் தெரியுமா? “எல்லாம் மாறிடிச்சு.. ஆனால் அது மட்டும்”.. வெற்றி பெற்றும் ரோகித் அதிருப்தி.. என்ன காரணம் தெரியுமா?

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

கடின இலக்கை துரத்திய இந்திய அணியில் ஓப்பனிங் வீரர்கள் கே.எல்.ராகுல் 1 ரன்னுக்கும், ரோகித் சர்மா 17 ரன்களுக்கும் அவுட்டாகி ஏமாற்றினர். எனினும் இதன் பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி (63), சுர்யகுமார் யாதவ் (69) ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கடந்த போட்டிகளில் சொதப்பிய விராட் கோலி மீண்டும் சிறப்பாக விளையாடியது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

கோலி பேச்சு

கோலி பேச்சு

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து விராட் கோலி மனம் திறந்துள்ளார். அதில், ஏதோ ஒரு பவுலரை அட்டாக் செய்தே தீர வேண்டும் என நினைத்தேன். அப்படிதான் ஜாம்பாவை குறிவைத்தேன். அவரை அடித்து ஆடினால் மிடில் ஓவர்களில் நன்கு ரன் குவித்துவிடலாம். அதே போலவே செய்தும் காட்டினேன்.

ரோகித் குறுஞ்செய்தி

ரோகித் குறுஞ்செய்தி

சூர்யகுமார் யாதவும் மறுபுறத்தில் அதிரடி காட்டினார். பெவிலியனில் இருந்த ரோகித் சர்மா "நீங்கள் நிதானமாக விளையாடுங்கள், சூர்யகுமார் அடித்து விளையாடட்டும் என தகவல் கூறி அனுப்பினார். இதே போல நான் வேகத்தை குறைத்து பார்ட்னர்ஷிப் கொடுக்க முயன்றேன். சூர்யகுமார் விளையாடுவதை பார்த்து தான், பந்துகள் எப்படி வருகிறது, எப்படி அடிக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டேன்.

சிக்ஸர்

சிக்ஸர்

சிறப்பாக விளையாடி வந்த நாங்கள், கடைசி ஓவரில் 4 -5 ரன்கள் வரை தான் அடிக்க வேண்டிய சூழல் இருக்க வேண்டும் என எதிர்பார்த்தோம். ஆனால், 11 ரன்களை அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தது. இதனால் தான் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க வேண்டும் என முயன்றதாக கோலி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat kohli speech about his half century After India beat australia in 3rd t20 match
Story first published: Monday, September 26, 2022, 11:44 [IST]
Other articles published on Sep 26, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X